districts

img

மரணச் சாலைக்கு மலர்வளையம் வைத்து போராட்டம்

கோவை, ஜன.10- கோவையில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாலைக்கு மாலை அணிவித்தும், மலர்  வளையம் வைத்தும் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பால கட்டுமான பணி கள் நடைபெற்று வருவதால்  காந்தி புரம் பகுதியில் இருந்து துடியலூர் செல்லும் கனரக வாகனங்கள் கணபதி, மணியகாரம்பாளையம் வழியாக திருப்பி விடப்பட்டு வருகிறது. இத னால் மணியகாரம்பாளையம் முதல் நஞ்சே கவுண்டன்புதூர் வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கி றது. இதனால் இப்பகுதிகளில் அடிக் கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இந் நிலையில், சிதிலமடைந்துள்ள சாலையை சீரமைத்து தர கோரி வாலி பர் சங்கத்தினர் மற்றும் அப்பகுதி  பொதுமக்கள் பல்வேறு துறை அதிகா ரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை.  இதனையடுத்து நஞ்சே கவுண்டன் புதூர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன முறையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். முன்னதாக, மேளதா ளங்கள் முழங்க மாலை மற்றும் மலர் வளையங்களை ஏந்தி பேரணியாக வந் தனர். இதன்பின் சாலைக்கு மாலை  அணிவித்தும், மலர் வளையம் வைத் தும் அஞ்சலி செலுத்தினர். மேலும்,  சாலையை உடனடியாக சீரமைத்து தர நெடுஞ்சாலை துறை மற்றும் மாநக ராட்சி அதிகாரிகளை வலியுறுத்தி ஒப் பாரி வைத்து முழக்கங்கள் எழுப்பி னர்.  வாலிபர் சங்கத்தின் எஸ்.எஸ்.குளம் ஒன்றிய குழு உறுப்பினர் விஜய குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நூதனப் போராட்டத்தில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப் பினர் வி.இராமமூர்த்தி, மேற்கு பகுதி குழு செயலாளர் சண்முகசுந்தரம், ஒன் றியக் குழு உறுப்பினர் ரமேஷ், வாலி பர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே. எஸ்.கனகராஜ் உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர். இந்த நூதன போராட்டம் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை வெகுவாக ஈர்த் தது.