சேலம், டிச.15- மோடி தலைமையிலான ஒன்றிய அர சின் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து சேலத்தில் வேலை நிறுத்த ஆயுத்த மாநாடு நடை பெற்றது. ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண் டித்து வரும் பிப்ரவரி மாதம் 23,24 ஆகிய தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட் டுள்ளது. இந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்யும் வகையில் சேலம் ஜி.வி.என் திரு மண மண்டபத்தில் கோரிக்கை விளக்க மாவட்ட மாநாடு நடைபெற்றது. தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் பொன்னி. பழனியப்பன், சிஐடியு மாவட்ட செயலா ளர் டி. உதயகுமார், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் டி. வடமலை ஆகியோர் தலைமை வகித்தனர். ஏஐடியுசி மாவட்ட செயலா ளர் எம்.முனுசாமி, எச்எம்எஸ் மாநில செய லாளர் சி.கோவிந்தன், ஏஐசிசிடியுஐ மாவட்ட செயலாளர் ஆர். வேல்முருகன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இதில், சிஐ டியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், தொமுச கௌரவத் தலைவர் இரா. ராஜேந் திரன் எம்எல்ஏ, ஏஐடியுசி மாநிலச் செயலா ளர் எஸ்.சின்னசாமி, எச்எம்எஸ் மாநில செயல் தலைவர் எம். சுப்பிரமணிய பிள்ளை, ஏஐசிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் சிறப் புரை ஆற்றினர்.
தீர்மானங்கள்
இம்மாநாட்டில், தொழிலாளர் நல சட்டங் களை திருத்தியதை ரத்து செய்ய வேண் டும். அத்தியாவசிய பாதுகாப்பு பணிகள் சட் டத்தை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர்கள், திட்ட ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதி யம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய பணமாக்கும் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமலாக்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் அளித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோலிய பொருட்களின் மீதான கலால் வரியை குறைத்து, விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இம்மாநாட்டில் சிஐடியு சாலைப் போக்குவரத்து சங்க மாநில தலை வர் எஸ்.கே.தியாகராஜன், மாவட்டத் தலை வர் பி. பன்னீர்செல்வம், தொமுச நிர்வாகி வி.மணி, ஏஐடியுசி நிர்வாகி வி.முருகன், எஸ்.சம்பத், ஐஎன்டியுசி நிர்வாகி ஆர். தேவ ராஜன், சுவர்ண ராசு, எச்எம்எஸ் நிர்வாகி கோவிந்தராஜ், பி.கணேசன், ஏஐசிசிடியூ கே.நடராஜன், வேல்முருகன் உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள், ஊழி யர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். முடிவில், தொமுச நிர்வாகி பி.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறி னார்.