districts

img

இந்து முன்னணியினர் அடாவடி கடையை அடைக்கச்சொல்லி கல்வீச்சு, கண்ணாடி உடைப்பு

ஈரோடு, செப். 20- திமுக கொள்கை பரப்பு பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளு மன்ற உறுப்பினருமான ஆ.ராசா  உள்அரங்கு கூட்டத்தில், மனு ஸ்மிருதி குறித்து பேசியதை பூதகர மாக்கி இந்து முன்னணியினர் அடாவடி நடவடிக்கையில் ஈடுபட் டுள்ளனர். இதன்ஒருபகுதியாக நீலகிரி நாடாளுமன்ற தொகுதி யில் கடையடைப்புக்கு அழைப்பு  விடுத்து போதிய ஆதரவில்லாத நிலையில் கல்வீசி தாக்குதல் நடத் தியும், கண்ணாடிகளை உடைத்தும் அரஜாக நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம் பகுதியில் அதிகாலை 4  மணி முதலே டீக்கடை, பேக்கரி  உள்ளிட்ட கடைகள் திறக்கப் பட்டது. அப்போது முதல் இந்து முன்னணியினர் கடைகளை அடைக்கச் சொல்லி தகராறு செய்து  வந்தனர். இதன் ஒரு பகுதியாக வீரம்பாளையத்தில் உள்ள ராஜதானி  என்ற பேக்கரியில் கண்ணாடி களை உடைத்து சேதப்படுத்தினர்.  இதனையடுத்து சத்தி பேருந்து நிலையத்தில் உள்ள திமுக துணை செயலாளருக்குச் சொந்தமான கடையை அடைக்கச் சொல்லி தகராறு செய்தனர். இதனையடுத்து நகர மன்ற தலைவர் ஜானகி காவல்துறையில் இதுகுறித்து புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இந்து முன்னணி நிர்வாகி சக்திவேல் உள்ளிட்ட 11  பேரை கைது செய்தனர். இதனை யடுத்து வழக்கம்போல் கடைகள் திறந்து செயல்பட்டது. வாராந்திர சந்தையும் கூடியது. 

இதற்கிடையில் பேக்கரி கடை யின் உரிமையாளரை அழைத்த இந்து முன்னணியினர் என்ன செல வானாலும் அதனை சரி செய்து  கொடுத்து விடுகிறோம் எனத் தெரிவித்துள்ளனர். இந்து முன்னணி யினரால் கடைகளுக்கு சேதம் ஏற் பட்டு விடுமோ என்ற அச்சத்தில் சிலர்  கடைகளை அடைத்து சென்றனர்.இருப்பினும் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இதற்கிடையே பந்தலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகளை மூட வலியுறுத்தி இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தர்கள் கடை உரிமையாளர்களிடம் தகராறில் ஈடு பட்டனர். மேலும், திறந்திருந்த கடைகள் மீது இந்து முன்னணி அமைப்பினர் கற்கள் வீசி தாக்குதல்  நடத்தினர். இச்சம்பவம் தொடர் பாக 18க்கும் மேற்பட்டோர் கைது  செய்யப்பட்டனர். நீலகிரி நாடாளு மன்ற தொகுதிக்கு உட்பட்ட, கோவை  மாவட்டம், அன்னூர் மற்றும் அதன்  சுற்றுவட்டாரத்தில் திமுக மற்றும்  அதன் கூட்டணி கட்சியினர், இந்து முன்னணியின் அச்சுறுத்தலுக்கு பயப்பட வேண்டாம், நாங்கள் முழுமையான பாதுகாப்பு தரு கிறோம் என கடை கடையாக சென்று  துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும், கடைகளை திறக்க பாது காப்பு அளிக்கக்கோரி அன்னூர் காவல் நிலையத்திலும் புகார் அளித் தனர். இதற்கு போட்டியாக இந்து முன்னணியினர் கடைகளை மூடு மாறு கடைக்காரர்களை அச்சுறுத் தினர். அவிநாசி உள்ளிட்ட பகுதி களில் சலூன் உள்ளிட்ட கடை களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். இதன்காரணமாக கடைகளுக்கு சேதம் ஏற்படுமோ என்கிற அச்சத்தில்  வியாபாரிகள் ஆங்காங்கே கடைகள்  அடைத்து விடுமுறை எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து இந்து முன்னணியை சேர்ந்த 16 பேர் கைது  செய்யப்பட்டனர். முக்கிய சாலை களில் போலீசார் பாதுகாப்பு பணி களில் ஈடுபடுத்தப்பட்டனர்.

;