நாமக்கல், பிப்.25- காவிரி ஆற்றில் திருடப்பட்டு கொண்டு வரப்பட்ட மணல் மூட்டை களை பரிசலுடன் அதிகாரிகள் பறி முதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம், ஓடப்பள்ளி, களியனூர், சமயசங்கிலி, கணபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக காவிரி ஆறு செல்கிறது. முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள காவிரி ஆற்றில் இருந்து திருச்செங்கோடு வரை ராட் சத குடிநீர் குழாய்கள் மூலமாக, திருச் செங்கோடு நகராட்சிக்கு தினந்தோ றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கோடைக்காலம் நெருங் கியுள்ள நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து மிகவும் குறை வாக உள்ளதால், நீர் வறண்டு பாறைகளாகவும், மணல் திட்டுக் களாகவும் காட்சியளிக்கிறது. இந் நிலையில், காவிரி ஆற்றில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மணல் திருட்டு நடைபெற்று வருவது அதிக ரித்துள்ளது. ஈரோடு, பள்ளிபாளை யம் பகுதிகளைச் சேர்ந்த நபர்கள் இரவு சுமார் 10 மணிக்கு மேல் பரி சலை இயக்கி ஆற்றின் மையப் பகுதி யில் இருந்து சாக்குப் பையில் ஆற்று மணலை மூட்டையாக கட்டி கரைக்கு கொண்டு வரப்பட்டு பின், டிராக்டர் களில் திருட்டுத்தனமாக அள்ளிச் செல்கின்றனர். இந்நிலையில், சமய சங்கிலி கிரா மப்புற காவிரி கரையோரம், பரிசல் மூலமாக மணல் அள்ளி மூட்டைக ளாக அடுக்கி வைத்து கடத்திச் செல் லப்படுவதாக திங்களன்று இரவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத் தது. இதனையடுத்து சமயசங்கிலி கிராம நிர்வாக அலுவலர் தியாகரா ஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடி யாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில், ஈரோடு மாவட்டம் லட்சுமி நகர் அருகே உள்ள அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் கள், கடந்த நான்கு நாட்களாக திருட் டுத்தனமாக காவிரி ஆற்றில் பரிசல் மூலமாக மணலை கடத்திச் சென்ற தும் தெரிய வந்தது. இதனையடுத்து மணலை மீண்டும் காவிரி ஆற்றில் கொட்டிச்செல்லுமாறு எச்சரித்து மணலை கொட்டிய பிறகு அதன் பிறகு அவர்களை அனுப்பி வைத்த னர். மணல் கடத்தல் குறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் மற்றும் காவிரி கரையோர விவசாயி கள் புகார் தெரிவித்தாலும், மணல் கடத்தும் நபர்களை பிடித்துக் கொடுத் தாலும் அரசு அதிகாரிகள் மணல் கடத் தலில் ஈடுபடும் நபர்கள் மீது எந்த நட வடிக்கையும் எடுக்காமல் எல்லை பிரச்சனையை காரணம் காட்டி, அவர் களை திருப்பி அனுப்பி வைத்து விடுகின்றனர். எனவே, காவிரி ஆற் றுக்குள் மணல் திருடிச் செல்வோர் மீது அதிகாரிகள் கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்பதே அப்பகுதி பொதுமக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது. மேலும், ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், இரவு நேரங்களில் காவிரி ஆற்றில் கூடுதல் கண்காணிப்பை போலீசார் மேற்கொள்ள வேண்டும், என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.