districts

img

அதிநவீன தொழில் நுட்ப ஆய்வகம் கட்டுமானப் பணி துவக்கம்

நாமக்கல், செப்.8- நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலை யத்தில் ரூ.7.46 கோடி மதிப்பீட்டில் அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட ஆய்வக கட்டுமானப் பணி துவங்கிவுள்ளது.  நாமக்கல் அருகே கீரம் பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பல்வேறு தொழில் சார்ந்த பாடப் பிரிவு களுடன் செயல்பட்டு வருகிறது. தற் போது 176 மாணவ, மாணவிகள் பயின்று  வருகின்றனர். மேலும், 4.0 என்ற புதிய தொழில்நுட்பத்தில் உயர் தொழில்நுட்பப் பிரிவுகள் 2023 ஆக.1 முதல் தொடங்கப்பட உள்ளன. கீரம்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (டாடா நிறுவனத்தின் முழுமையான பங்களிப்பில்) ரூ.3.73 கோடி  மதிப்பீட்டில் பணிமனையுடன் கூடிய ஆய் வகம் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன.  நாமக்கல் மாவட்டத்தில், லாரி கூண்டு கட்டும் பணிமனைகள் நிறைந்த நகரமாக விளங்குவதால் அதனடிப்படையில் இங்கு மோட்டார் வாகன பழுது பார்ப்பு குறித்த படிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அருள், நாமக்கல் அரசினர்  தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.