districts

img

மாநில அளவிலான சைலாத் சிலம்பப் போட்டிகள்

திருப்பூர், டிச.07-  திருப்பூர் மடத்துக்குளத்தில் மாநில அளவிலான சைலாத்  சிலம்பப் போட்டிகள் நடைபெற்றது.   தமிழ்நாடு சைலாத் சங்கம், பகத்சிங் சிலம்பம் களரி மார் ஷியல் ஆர்ட்ஸ் கல்ச்சுரல் அண்ட் சரிடபில் டிரஸ்ட், திருப்பூர் மாவட்ட சைலாத் சிலம்ப சங்கம் ஆகியவற்றின் சார்பில்  மாநில அளவிலான 14வது சிலம்ப போட்டிகள், மடத்துக் குளம் சோழமா தேவி  அக்ஷரா வித்யா மந்திர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. மாநில அளவில் நடத்தப்பட்ட போட்டியில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த சைலாத்  சிலம்ப  வீர,வீராங்கனைகள் 400 பேர் பங்கேற்றனர்.  பகத்சிங் சிலம்பம் களரி மார்சியல் ஆர்ட்ஸ் அறக் கட்டளை மற்றும் தமிழ்நாடு களரிப்பயட்டு அசோசி யேஷனின் திருப்பூர் மாவட்ட சங்க செயலாளர் வீரமணி ஆசான் தேசிய கொடியை ஏற்றி வைத்து வரவேற்று பேசி னார். மடத்துக்குளம் காவல்துறை உதவி ஆய்வாளர் காயத்ரி, சக்திவேல் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். இப்போட்டிகள் 4 பிரிவுகளில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.   சிலம்பம் குறித்து சைலாத் சிலம்ப சங்க மாநில தலைவர் குமரி கணேசன் கூறுகையில், தமிழகத்தில் தற் போது பல ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு கட்ட போராட் டங்களுக்கு பிறகு சிலம்பத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட் டுள்ளது. இதேபோல் பாரம்பரிய ஆதிகால அடிமுறை கலையான சைலாத் சிலம்ப முறைக்கும் உரிய அங்கீகாரம் தமிழக அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.