districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மது போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர், நடத்துனர் ‘சஸ்பெண்ட்’

உதகை, மே 14- மது போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மற்றும்  நடுத்துனர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். உதகை கிளையிலிருந்து, கடந்த 6 ஆம் தேதி மாலை திருச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்தை ஓட்டுநர் ராஜ்குமார் இயக்கியுள்ளார். நடத்து னராக பிரகாஷ் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில், பேருந்தானது குன்னூரை கடந்த போது மலைப்பாதையில் அதிவேகத்தில் சென்றுள்ளது. இதை பயணிகள் கவனித் துள்ளனர். இதைத்தொடர்ந்து, மீண்டும் பை பாஸ் சாலை யில் பேருந்து அதிவேகத்தில் தாறுமாறக சென்றுள்ளது.  பின்பு சுதாரித்து கொண்டு பயணிகள் நடத்துனரிடம் பேருந்தை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் நடத்துநர் அதை கண்டுகொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பயணிகள் ஒட்டுநர் இருக்கை அருகே சென்று சத்தம் போட்டு பேருந்தை நிறுத்தினர். அப்போது,  ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.  உடனே, இருவரையும் அவிநாசி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பின்பு போலீசார் இருவர்  மீதும் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, மாற்று ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வரவழைக்கப்பட்டு நான்கு மணி நேரம் தாமதத்திற்கு பின்,  பேருந்து திருச்சிக்கு சென்றது.  இது குறித்து, போக்குவரத்து பொதுமேலாளர் கணபதி  கூறுகையில், திருச்சி சென்ற பேருந்தில் ஓட்டுநர் மற்றும்  நடத்துனர் மது போதையில் பணியில் இருந்தது கண்டிக்கத் தக்கது. அவர்கள் இருவரும் ‘பணியிடை நீக்கம் செய்யப் பட்டு, துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  மேலும், இனிவருங்காலங்களில் பணிக்கு வரும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அனைவருக்கும் ‘ஆல்கஹால்’ பரிசோ தனை நடத்தப்படும். பணியில் இருக்கும் போது இது போன்ற செயலில் ஈடுபடும் போக்குவரத்து ஊழியர்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.‘‘ என்றார்.

நீலகிரி அணைகளில் மின் உற்பத்தி துவக்கம்

உதகை, மே 14- நீலகிரி மாவட்டத்திலுள்ள அணைகளில் தண்ணீர் தேக்கி  வைக்கப்பட்டு, மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகி றது. நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா நீர் மின்திட்டத் தின் கீழ், குந்தா, கெத்தை, பரளி, பில்லுார், காட்டுகுப்பை, அவலாஞ்சி உள்ளிட்ட 12 மின் நிலையங்கள் உள்ளன. இந்த  மின் நிலையங்களுக்கு 13 அணைகளில் தேக்கி வைக்கப் படும் தண்ணீர் மூலம் தினசரி, 833.65 மெகாவாட் மின் உற்பத்தி  மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டு பருவமழை பொய்த்த தால், அணைகளில் இருப்பில் இருந்த தண்ணீர் படிப்படி யாக குறைந்தது. மின் உற்பத்திக்கு போதுமான அளவு தண்ணீர் இல்லாததால், குந்தா, கெத்தை, பரளி, பில்லுார்  உள்ளிட்ட 8 மின் நிலையங்களில் கடந்த ஏப்ரல் மாதத்தில்,  இரு வாரங்கள் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலை யில், அப்பர்பவானி அணையின் 210 அடியில், 60 அடி வரை  தண்ணீர் இருப்பில் இருந்தது. இங்கிருந்து பில்லுார் அணைக்கு 20 அடி வரை தண்ணீர் கொண்டு செல்லப் பட்டு, அணையில் தேக்கி வைக்கப்பட்டு குடிநீர் தேவை, மின்  உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டது. அதேபோல், டனல் வழியாக குந்தா, அவலாஞ்சி, கெத்தை அணைக்கு 15 அடி  வரை தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தேக்கி வைக்கப்பட் டது. இருப்பில் உள்ள தண்ணீர் அளவை பொறுத்து, மின்  உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மார்க்சிஸ்ட் கட்சியின் முயற்சியால் மாநகராட்சி பூங்காவில் ஆடை கட்டுப்பாடு அகற்றம்

ஈரோடு, மே 14- ஈரோடு மாநகராட்சி நடைபயிற்சி பூங்காவில் நுழைய விதிக்கப்பட்ட ஆடை கட்டுப்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியால் கைவிடப்பட்டது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் ஈரோடு மாவட்டச் செயலாளர்  ஆர்.ரகுராமன் விடுத்த அறிக்கையில்  கூறியிருப்பதாவது:- ஈரோடு மாநக ராட்சி, பேருந்து நிலையம் அருகே வ.உ.சி பூங்கா அமைந்துள்ளது. இப் பூங்காவில் அதிகாலை 4.30 மணி  முதல் 9 மணி வரையும், மாலை 4  மணி முதல் 7.30 மணி வரையும் நடை பயிற்சிக்கு அனுமதிக்கப்படுகிறது. இங்கு உடற்பயிற்சி கூடம் மற்றும் விளையாட்டு உபகரணங்களும் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளன. இப்பூங்காவில் நாள்தோறும் ஆண் கள், பெண்கள் குழந்தைகள் என சுமார் 500க்கு மேற்பட்டோர்,  நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி  செய்து வருகின்றனர். இந்தநி லையில், அப்பூங்காவில் செயல் பட்டு வரும் நடைபயிற்சியாளர் சங் கத்தினர், அங்கு நடைபயிற்சி வரு வோருக்கு ஆடைக்கட்டுப்பாட்டை விதித்தும், ஆண்டு சந்தாவாக ரூ.350ம் பெற்று வருகின்றனர். மாநகராட்சியின் கீழ் பூங்கா செயல் பட்டு வந்தாலும், நடைபயிற்சியாளர் சங்கத்தினர் இதை நடைமுறையில் வைத்துள்ளனர். இதனிடையே, கடந்த சில நாட்க ளுக்கு முன் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பி.சண்முகம் மற்றும் வி.அமிர்தலிங்கம் ஆகியோர் காலை நேரம் நடைபயிற்சிக்கு சென்ற னர். அவர்கள் லுங்கி அணிந்து சென்ற தால் அவர்களை உள்ளே அனும திக்க பாதுகாவலர் மறுத்து விட்டார்.  பின்பு சங்க நிர்வாகியிடம் அவர்கள்  கேட்டபோது, மாநகராட்சி பூங்கா  தான். ஆனால் நாங்கள் தான் பரா மரித்து வருகிறோம். எனவே லுங்கி யுடன் உள்ளே அனுமதியில்லை என்று விதண்டாவாதம் செய்தனர்.  இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கட்சி  சார்பில் மாநகராட்சியில் புகார் செய் யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் எடுத்த நடவடிக்கையால் மறுநாளே லுங்கி யுடன் உள்ளே வரக்கூடாது என்ற நடைமுறை தளர்த்தப்பட்டது. அது குறித்த வாசகங்களும் அழிக்கப்பட் டது. இதன் மூலம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முயற்சியால், வ.உ.சி பூங்காவிற்குள் நுழைய விதிக்கப்பட்ட பாகுபாடு முடிவிற்கு வந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலை மத்தள ஓடையில் வெள்ளப்பெருக்கு

உடுமலை, மே 14- உடுமலை அருகே திருமூர்த்தி மலை பொன்னாளம்மன் சோலை பகுதியில் உள்ள மத்தள ஓடையில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. உடுமலையின் தெற்கு பகுதியில் மேற்கு  தொடர்ச்சி மலைத்தொடர் அமைந்துள்ளது.  இம்மலை தொடரில் ஏராளமான சிற்றோடை கள் உள்ளன. மழைக்காலங்களில் சேகர மாகும் மழை நீர் தாழ்வான இடங்களை நோக்கி பாய்வது வழக்கம். திருமூர்த்தி மலை, பொன்னாளம்மன் சோலை, நல் லார் காலனி உள்ளிட்ட பகுதிகளில் காட் டாற்று வெள்ள நீர் வடியும் வகையில் பல் வேறு ஓடைகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், வெயிலில் வறண்டு வந்த குளம், குட்டை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஓடைகள் புத்துயிர் பெற்றது போல, தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.  அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை பொன்னாளம்மன் சோலை பகுதியில் உள்ள  மத்தள ஓடையில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த சில மாதங்களாக மழை  இல்லாத காரணத்தால், ஓடை வறண்டு  காணப்பட்டநிலையில், கடந்த சில நாட்க ளாக மாலை நேரத்தில் பெய்து மழையால் மத்தள ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. இதனால், கரையோர விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சவுக்கு சங்கரின் ஜாமின் மனு  மே 20 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கோவை, மே 14- கோவை நான்காவது குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் சவுக்கு சங்கர் தாக் கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசா ரணை வரும் இருபதாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பெண் காவலர்கள் குறித்தும், காவல் துறை அதிகாரிகள் குறித்தும் அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதனி டையே சவுக்கு சங்கரை  காவலில் எடுத்து  விசாரிக்க போலீஸ் தரப்பில் அனுமதி கேட் கப்பட்ட நிலையில், ஒருநாள் மட்டும் காவல் துறை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித் துள்ளது. இதனையடுத்து, செவ்வாயன்று சவுக்கு சங்கரிடம் கோவை சைபர் கிரைம்  போலீசார் விசாரணை நடத்தி் வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் செவ்வாயன்று மாலை 5 மணி அளவில் மீண்டும் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட இருக்கின்றார்.  இதனிடையே, சவுக்கு சங்கர் சார்பில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டு  கோவை நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை செவ்வாயன்று நீதிபதி  சரவணபாபு முன்னிலையில் விசார ணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசார ணையை வரும் மே 20 தேதிக்கு நீதிபதி சரவணபாபு ஒத்திவைத்தார்.

கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் தற்கொலை முயற்சி!

கோவை, மே 14- சிறுமிக்கு கூட்டு பாலியல் கொடுமை  வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவன்,  கோவை சீர்திருத்தப் பள்ளியில் தற் கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை பகுதியில் சிறுமியை கூட்டுப்  பாலியல் வன்கொடுமை செய்த வழக் கில் 6 இளைஞர்கள், 3 சிறார்கள் என  மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்ட னர்.  கைதான இளைஞர்கள் ஆறு பேர்  கோவை மத்திய சிறையில் அடைக் கப்பட்ட நிலையில், மூன்று சிறார்க ளும் கோவை லட்சுமி மில்ஸ் பகுதி யில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல் லத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில், 17 வயது சிறுவன்  ஒருவர் திங்களன்று இரவு கைகளை கழுவுவதற்கு பயன்படுத்தப்படும் சோப்பு ஆயிலை குடித்து தற்கொ லைக்கு முயன்று உள்ளார். இதனை  அறிந்த அதிகாரிகள் அச்சிறுவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்பொழுது அச்சிறுவன் உடல்நிலை தேறி விட்டதாக கூறப்படுகிறது. சிறுவ னின் தற்கொலை முயற்சி குறித்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோத மது விற்பனை: 7 பேர் கைது

சட்டவிரோத மது விற்பனை: 7 பேர் கைது ஈரோடு, மே 14- ஈரோடு தாலுகா போலீசாருக்கு கிடைத்த தகவலை  அடுத்து, பச்சப்பாளி மதுக்கடை அருகே ஆய்வு நடத்தினர்  அப்போது, சட்டவிரோத மது விற்பனை யில் ஈடுபட்டிருந்த சிவக்குமார் (55) என்பவரை கைது செய்த னர். இதேபோல், பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத மது  விற்பனையில் ஈடுபட்டிருந்த சித்தையன்(59), ஜான்(63),  பிரகாஷ்(24), சின்னபாப்பாள்(54), பூவரசன்(26), சித்தலிங் கம்(38) ஆகிய 7 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களி டமிருந்து ஏராளமான மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கூக்கல்தொரை ஆற்றில் வெள்ளம் 

கூக்கல்தொரை ஆற்றில் வெள்ளம்  உதகை, மே 14- உதகையில் பெய்த மழையால், கூக்கல்தொரை ஆற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் இறுதி வரை மழை பெய்யவில்லை. இதனால் கடும் வறட்சி ஏற் பட்டு தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில், மே 4  ஆம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை  பெய்து வருகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஓரளவுக்கு  சமாளிக்கப்பட்டு வருகிறது. மலை காய்கறி தோட்டங்க ளில் விதைப்பு பணிக்கான காலநிலை நிலவுகிறது. இந்நி லையில், திங்களன்று மதியம் உதகை மற்றும் அதன் புற நகர் பகுதிகளான கல்லட்டி கட்டபெட்டு, கூக்கல்தொரை உள் ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சாலையில் மரம்  விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூக்கல்தொரை நீரோடையில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. நீலகிரி மாவட் டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.

ஒற்றை காட்டுயானையால் பொதுமக்கள் அச்சம்

ஒற்றை காட்டுயானையால் பொதுமக்கள் அச்சம் உதகை, மே 14- கோத்தகிரி அருகே கூக்கல்தொரை பகுதியில் ஒற்றை  காட்டுயானை முகாமிட்டுள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கூக்கல் தொரை பகுதியைச் சுற்றி 10க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் பொதுமக்கள் அதிகப்படியாக மலைக்காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர். இத னால் பகல், இரவு மற்றும் அதிகாலையில் 4 மணிக்கு மலைக் காய்கறிகள் அறுவடை, நீர் பாய்ச்சும் பணிக்கு செல்கின்ற னர். மசினகுடி, சீகூர் வனச்சரகத்தில் இருந்து சமீபகாலமாக  காட்டுயானை கூட்டம் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. பகல்  மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு, சாலைகளில் உலா  வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். விவசாய  நிலங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், விவசாயி களை தாக்கும் அபாயம் உள்ளது. இந்நிலையில், ஒற்றை யானை அப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் பணிக்கு செல்ல வேண்டிய சூழல் நிலவு கிறது. எனவே, வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் மூலம் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக் குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி  பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேசிய அளவிலான சிலம்பம் போட்டி சங்ககிரி மாணவர்கள் அசத்தல் வெற்றி

தேசிய அளவிலான சிலம்பம் போட்டி சங்ககிரி மாணவர்கள் அசத்தல் வெற்றி சேலம், மே 14- ஆலப்புழாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம் பம் போட்டியில், சங்ககிரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்  7 பேர் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்று அசத்தி னர். கேரள மாநிலம், ஆலப்புழாவில் சிலம்பம் விளையாட் டுச் சங்கம் சார்பில் தேசிய அளவிலான சிறப்பு சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டம் சங்ககிரி ஆர். எஸ். பகுதியைச் சேர்ந்த அகத்தியர் சிலம்பம் தற்காப்புக்  கலைக்கூடம் சார்பில் பங்கேற்ற 7 மாணவ, மாணவிகள் ஒற் றைக்கம்பு, இரட்டைக் கம்பு உள்ளிட்ட சிலம்பம் போட்டி யில் பங்கேற்று விளையாடினர். அதில் சங்ககிரியைச் சேர்ந்த  மாணவ, மாணவியர் இரண்டு பேர் முதலிடத்திலும், நான்கு  பேர் 2 ஆவது இடத்திலும், ஒருவர் 3 ஆம் இடத்திலும் வெற்றி  பெற்றனர்.

4 பள்ளி வாகனங்கள் தகுதி நீக்கம்

சேலம், மே 14- ஓமலூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி  பேருந்துகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்ததில், 12 வாக னங்களில் குறைபாடுகள் கண்டறிப்பட்டு, 4 வாகனங்கள் தகுதி  நீக்கம் செய்யப்பட்டன. சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள தனியார் பள்ளி வளா கத்தில் அனைத்து பேருந்துகளும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டன. மேட்டூர் சார் ஆட்சியர் பொன்மணி தலைமையில், ஓம லூர் மோட்டார் வாகன ஆய்வாளா் கவிதா, தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு, பள்ளி பேருந்துகளில் ஆய்வு செய்த னர். சில பேருந்துகளில் முகப்பு கேமரா, பின்புற கேமராக்கள்  டிஸ்பிளே இல்லாமல் இருப்பதும், இருக்கைகள் அழுக்காக இருப்பதையும் அறிந்த சார் ஆட்சியர் பொன்மணி, அந்தப் பேருந்துகளை தகுதி நீக்கம் செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும், பேருந்துகளில் உள்ள குறைபாடுகளை முழுமை யாக சரிசெய்து வர வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை முழுமையாகக் கடைப்பிடிக்கும் பேருந்துகளை மட்டுமே  இயக்க அனுமதிக்க முடியும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் கவிதா  பேருந்துகளை சோதனை செய்து, பேருந்துகளில் உள்ள குறைகளைக் கண்டறிந்து மீண்டும் சரிசெய்யுமாறு அறி வுறுத்தினார். அதன்படி 12 வாகனங்களில் குறைபாடுகள் கண் டறியப்பட்டன. அந்தக் குறைபாடுகளை சரி செய்து மீண்டும்  ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும், 4 வாக னங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

நடுரோட்டில் மோதல்: போக்குவரத்து பாதிப்பு

நாமக்கல், மே 14- பள்ளிபாளையத்தில் இரண்டு தரப்பினர் நடுரோட்டில் மோதிக்கொண்டதால், அப்ப குதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் - திருச்செங்கோடு சாலையில், ஜீவா செட் என்ற பகுதியில், உள்ளூர் பகுதியைச் சேர்ந்த  இருவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் அரசு மதுக்கடையிலேயே தகராறு ஏற்பட் டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மதுக் கடையில் இருந்து வெளியே வந்தவர்க ளிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட  நிலையில், ஜீவா செட் என்ற பகுதி அருகே  வாக்குவாதம் முற்றி ஒருவருக்கு ஒருவர்  தாக்கிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. அப் போது இரண்டு தரப்பை சேர்ந்தவர்களும் தங் கள் தரப்பு ஆட்களை அதிகளவு சேர்த் துக் கொண்டு, நடுரோட்டில் மோதிக்கொண் டனர். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் பள்ளி பாளையம் காவல் துறையினருக்கு தகவல்  தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த போலீசார், தகராறில் ஈடு பட்டவர்களை பள்ளிபாளையம் காவல் நிலை யத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவத்தால் பள்ளி பாளையம் - திருச்செங்கோடு சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மரம் விழுந்து சுற்றுச்சுவர் சேதம்

நாமக்கல், மே 14- பள்ளிபாளையத்தில் பெய்த கனமழை காரணமாக சாலையோரமிருந்த பழமை யான மரம் சாய்ந்து, சுற்றுச்சுவரின் ஒரு பகுதி  இடிந்து விழுந்தது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் திங்களன்று பரவ லாக மழை பெய்தது. இந்த மழையின் காரண மாக சாக்கடை கால்வாய்களில் நீர் நிரம்பி,  மழைநீருடன் கழிவுநீர் சாலையில் பெருக்கெ டுத்தது. இதனிடையே, குமாரபாளையம் சாலை, புதன்சந்தை என்ற பகுதியில் உணவ கம் ஒன்றின் அருகே பழமையான மரம் ஒன்று  சாலையில் சாய்ந்து விழுந்தது. மேலும் மரம் சாய்ந்ததின் காரணமாக அப்பகுதியில் இருந்த மின்சார வயர்கள் துண்டிப்பு ஏற் பட்டு, அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கி யது. மேலும், அகிலாண்டேஸ்வரி என்பவ ருக்கு சொந்தமான இடத்தில் உள்ள சுற்றுச்சு வரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள், உள் ளாட்சி அமைப்பினர் சாய்ந்த மரத்தை அகற் றும் பணியில் ஈடுபட்டனர். பள்ளிபாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், கனமழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சேறும், சகதியுமாக மாறிய உதகை தாவரவியல் பூங்கா மைதானம்

உதகை, மே 14- உதகையில் பெய்த தொடர் மழை யால் தாவரவியல் பூங்கா புல் மைதா னம் சேறும், சகதியுமாக காட்சியளிக் கிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோ றும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங் கள் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கும். அதனைத்தொடர்ந்து அக் டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள்  வடகிழக்கு பருவமழை பெய்யும். அதன் பின் 6 மாதங்களுக்கு மழை பெய்யாது.  குறிப்பாக, மார்ச் மாதம் முதல் மே மாதம்  வரை மழை பெய்யாது. இச்சமயங்க ளில் சமவெளி பகுதிகள் போன்று இங் கும் வெயலின் தாக்கம் சற்று அதிகமாக  காணப்படும். மேலும், ஏப்ரல் மாதம்  கோடை மழை பெய்யும். ஆனால், கடந்த மாதம் மழை பெய்யவில்லை. இதனால் சமவெளி பகுதிகளை போன்று இங்கும் வெயில் வாட்டி எடுத் தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக உதகையில் கனமழை பெய்து  வருகிறது. இந்நிலையில், கடந்த மே 10 ஆம்  தேதியன்று உதகையில் அரசு தாவர வியல் பூங்காவில் மலர் கண்காட்சி துவங்கியது. இம்மலர் கண்காட்சி துவங்கிய நாள் முதலே உதகையில் நாள் தோறும் மழை பெய்து வருகி றது. இதனால், தாவரவியல் பூங்காவில்  உள்ள புல் மைதானம் சேறும், சகதியு மாக மாறியதால், சுற்றுலாப் பயணிகள்  கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.