districts

img

மக்களைத் தேடி மருத்துவம் - ஊழியர் சங்க அமைப்பு குழு துவக்கம்

 சேலம், அக்.5-   மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்கள் அமைப்புக் குழு கூட்டம் சேலம் சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற்றது.  தமிழக அரசின் திட்டங்களில் ஒன்றான மக்களை தேடி  மருத்துவம் திட்டத்தில் எண்ணற்ற பணியாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை வென் றெடுக்க புதிய சங்கம் துவங்கப்பட்டது.  சேலம் சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் டி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. மக்களைத் தேடி  மருத்துவ ஊழியர் சங்கம் சிஐடியு சங்கமாக செயல்படுவது  எனவும், சங்கத்தின் நோக்கங்கள் குறித்து சங்கத்தின் செய லாளர் மலர்விழி, திருப்பூர் மாவட்ட பொதுச் செயலாளர்  சாந்தாமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற் றினர். சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவராக பாலாம் பிகா, செயலாளராக செந்தமிழ் செல்வி, பொருளாளர்   கவிதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.