districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி

தருமபுரி, டிச.4- மன வளர்ச்சி குறைவான மாற்றுத் திறனாளி தமிழக வாலிபால் அணிக் கான தெரிவுப்போட்டி, தருமபுரியில் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட சிறப்பு ஒலிம் பிக் சங்கத்தின் சார்பாக மன வளர்ச்சி குறைவான மாற்றுத்திறனாளி தமிழக வாலிபால் ஆண்கள் அணிக்கான தெரிவுப்போட்டி தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட் டங்களில் இருந்து 25க்கும் மேற்பட்ட  மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து  கொண்டனர். முன்னதாக, இந்நிகழ்ச் சிக்கு தருமபுரி சிறப்பு ஒலிம்பிக் சங்க  தலைவர் சரவணன் தலைமை வகித் தார். சங்கத்தின் செயலாளர்  ஜெ.முத் துக்குமார் முன்னிலை வகித்தார். சங்கத்தின் இணைச்செயலர் முனை வர் கு.பாலமுருகன் வரவேற்றார். மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர்  பியூலா ஜென் சுசிலா, ரோட்டரி கிளப் துணை கவர் னர் வி.கே கோவிந்தராஜ், தலைவர்  குமரன், செயலர்  சரவணன், பொருளா ளர் இளவரசன், அக்ஷயா பள்ளி களின் தாளாளர் பெரியண்ணன், வெங் கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஸ்ரீபிரசாத், ஏ.விஆர். இன் பசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டு போட்டி களை துவக்கி வைத்தனர். இந்த மாநில அளவிலான தேர்வுப் போட்டிகளில் தேர்வு செய்யப்படும்  ஏழு வீரர்கள், ஜனவரி மாத இறுதி யில் குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெறும் தேசிய அளவிலான மன  வளர்ச்சி குறைவான  மாற்றுத் திறனா ளிக்கான வாலிபால் போட்டிகளில் தமிழகத்தின் சார்பாக பங்கேற்க உள்ள னர்.