அதிவேகமாக வாகனம் ஓட்டியது தவறுதான்- யூடியூபர் வாசன்
கோவை, அக். 1 - பெங்களூர் தப்பிச்செல்ல முயன்ற பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை வாகன சோதனையின் போது கைது செய்த சூலூர் போலீசார் ஜாமினில் விடுவித்தனர். அதி வேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கியது தவறுதான் என தெரிவித்துள்ளார். கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் இரு சக்கர வாகனத்தில் நீண்ட தூரம் பயணித்தும் அதை வீடியோவாக பதிவிட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபல மடைந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து கோவை வந்திருந்த போது டிடிஎப் வாசன், அவரை தனது இரு சக்கர வாக னத்தின் பின் இருக்கையில் அமர வைத்து அதி வேகத்தில் இயக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ வைரலான நிலையில் பொது இடத்தில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், பில்லியன் ரைடர் ஹெல்மெட் அணி யாதது, ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய பிரிவுகளில் போத்தனூர் மற்றும் சூலூர் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டது. இந்த நிலையில் வெள்ளியன்று அவிநாசி சாலையில் தென்னம்பாளையம் அருகே போலீசார் வாகன சோதனை மேற்கொண்டிருந்த போது பெங்களூருக்கு தப்பிச் செல்ல முயன்ற டிடிஎஃப் வாசனை மடக்கிப் பிடித்தனர். இதைடுத்து அவரை கைது செய்த போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். வாசன் தரப்பில் வழக்கறிஞர்கள் உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து அவரை போலீசார் காவல் நிலைய பிணையில் விடுவித் தனர். புறவழிச் சாலையில் விதிகளை மீறி அதிவேகமாக பைக் ஓட்டியது தவறு தான் என்றும், தற்போது அதை உணர்ந்து வேகத்தை குறைத்துக் கொள்ள போவதாக தெரி வித்தார்.
ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தாராபுரம், அக் . 1 - தாராபுரத்தில் மத்திய, மாநில அரசு ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய, மாநில அரசு, பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்பு களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சர்வதேச முதியோர் தினம் மற்றும் ஓய்வூதியர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்திற்கு பீர்ஜாபர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்களின் கௌர வமான, பாதுகாப்பான வாழ்க்கையை உத்திரவாதப்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட மூத்த குடிமக் களின் நல உரிமைகளை திரும்ப வழங்க வேண்டும். 80 மாத காலமாக நிலுவையிலுள்ள அரசு போக்குவரத்து கழக ஊழி யர்களின் பஞ்சப்படியை வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்ப டுத்த வேண்டும் உள்ளிட்ட ஓய்வூதியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசுத்துறை ஓய்வூ தியர் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ராஜேந்திரன், நசுரு தீன், நடராஜன், மேகவர்ணன், மணியன், நடராஜன், பாரதி, செங்குட்டுவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.
உடுமலை ஒன்றிய வி.தொ.ச மாநாடு
உடுமலை, அக். 1 - அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் உடுமலை ஒன்றிய மாநாடு சனிக்கிழமை உடுமலை ஸ்டாலின் நிலையத்தில் ஒன்றியப் பொருளாளர் சி.முத்துச்சாமி தலை மையில் நடைபெற்றது. இம்மாநாட்டை துவக்கி வைத்து மாவட்டத் துணைச் செய லாளர் ஏ.சண்முகம் உரையாற்றினார். ஒன்றிய செயலாளர் எம்.ரங்கராஜ் வேலை அறிக்கையை முன்வைத்தார். மாநாட்டை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் கே.தண்டபாணி, ஒன்றியச் செயலாளர் கி.கனக ராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலா ளர் ஏ.பாலதண்டபாணி, சிஐடியு செயலாளர் எஸ்.ஜெகதீ சன், தமுஎகச தலைவர் சுதாசுப்பிரமணியம் ஆகியோர் வாழ்த்தி பேசினார். இம்மாநாட்டில் புதிய தலைவராக சி.முத்துச்சாமி,செய லாளராக எம்.ரங்கராஜ், பொருளாளராக என்.சுப்புலட் சுமி,துணைத் தலைவர்களாக சுதா சுப்பிரமணியம், பி.ஏ. சுந்தரம், துணைச் செயலாளர்களாக எஸ்.மணி, ஆர்.சுந்தரம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இலவச வீட்டுமனை பட்டா, 200நாள் வேலை உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டச் செயலாளர் ஏ.பஞ்சலிங்கம் நிறைவரையாற்றினார். முடிவில் ஒன்றியப் பொருளாளர் என்.சுப்புலட்சுமி நன்றி கூறினார்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்
பொள்ளாச்சி, அக்.1- பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையின் கண் காணிப்பாளர் மருத்துவர் கலைச்செல்வி மீது நிர்வாக ரீதி யான புகார் காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கண் காணிப்பாளராக மருதூர் கலைச்செல்வி பதவி வகித்து வந்த நிலையில், கடந்த 28ஆம் தேதியன்று பொள்ளாச்சி-பாலக் காடு சாலையில் சரக்கு ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி யதில் 3 பேர் பலியாகினர். மேலும் 35 பேர் படுகாயம் அடைந் தனர். இந்த விபத்தில் காயமடைந்த அனைவரையும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டனர். காயமடைந்தவர்களை விபத்து நடந்த தினத்தன்று ஆட்சியர் சமீரன் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளரான மருத்துவர் கலைச்செல்வி பணிக்கு தாமதமாக வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பொள்ளாச்சி அரசு கண்காணிப்பாளர் கலைச்செல்வியிடம் பணிக்கு தாமதமாக வந்தீர்கள் என்று விளக்கம் கேட்டுள் ளார். இதற்கு கண்காணிப்பாளர் கலைச்செல்வி முறையான பதில் தெரிவிக்கவில்லை என தெரிகிறது. இதனையடுத்து மருத்துவ கல்வி இயக்குனருக்கு பொள்ளாச்சி கண்காணிப்பாளர் கலைச்செல்வியை பணி யிடை நீக்கம் செய்ய ஆட்சியர் சமீரன் பரிந்துரை செய்தார். இதனைத்தொடர்ந்து கண்காணிப்பாளர் மருத்துவர் கலைச் செல்வி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பொள்ளாச்சி அரசு மருத்துமனைக்கு புதிய கண்காணிப்பாளராக மருத் துவர் கார்த்திகேயன் தற்காலிகமாக பொறுப்பேற்றார்.
குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு
நாமக்கல், அக்.1- திருச்செங்கோடு பகுதிகளில் குழந்தை தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 29 குழந்தைத் தொழிலாளா்கள் மீட்கக் கப்பட்டனர். நாமக்கல் மாவட்ட அளவிலான குழந் தைத் தொழிலாளர் தடுப்புப் படை அறிவு ரையின்படி, நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப் பட்டது. இதில், வருவாய்த்துறை, தொழி லாளர் நலத் துறை அலுவலா்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், சைல்டு லைன் உறுப்பினா்கள், காவல் துறையினா் இணைந்து ஆய்வு மேற்கொண் டனர். இதில், சேந்தமங்கலம் வட்டம், முத்து காப்பட்டியில் உள்ள செங்கல் சூளையில் 16 வயது இரண்டு சிறுவர்கள், பெருமாப் பட்டி, படைவீடு பகுதியில் உள்ள நூற்பாலை களில் 13 வயதுடைய இரு குழந்தைத் தொழி லாளர்கள் மீட்கப்பட்டனர். மேலும் 20 சிறுமி கள், 5 சிறுவா்கள் கண்டறியப்பட்டு மீட்கப் பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் குழந்தை கள் பாதுகாப்பு நலக் குழுமத்தில் ஒப்படைக் கப்பட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களையோ, வளரிளம் பருவத் தினரையோ பணிக்கு அமர்த்தினால் குறைந்த பட்ச அபராதமாக ரூ. 20,000 விதிக் கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
செல்போன்கள் திருடிய 3 பேர் கைது
கோவை, அக் 1 - குவாரிக்குள் சென்று செல்போன்கள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை கிணத்துக்கடவு வாலி தோட்டத்தை சேர்ந் தவர் செந்தில்குமார் (47). இவர் செட்டிப்பாளை யத்தை அடுத்த தேங்கனி பகுதியில் குவாரி வைத்துள் ளார். இங்கு வடமாநிலத்தை சேர்ந்த சிக்கந்தர், சாகானி, பங்கச் சாகானி, நித்திஷ் ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். சம்பவத் தன்று அவர்கள் வழக்கம் போல வேலைகளை முடித்து குவாரியில் உள்ள தங்களாது அறைக்கு தூங்க சென்றனர். மறுநாள் எழுந்த போது அறையில் இருந்த அவர்களது 3 செல்போன்கள் காணமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து குவாரியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராக் களை ஆய்வு செய்தார். அதில் 3 வாலிபர்கள் குவாரி யில் இருந்து வெளியே செல்வது பதிவாகி இருந் தது. 3 வாலிபர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் பிடித்தனர். பின்னர் அந்த வாலிபர்களை செட்டிப் பாளையம் போலீசில் ஒப்ப டைத்தனர். போலீஸ் விசாரணை யில் அவர்கள் விருதுநகரை சேர்ந்த மாரிஸ்வரன் (19), ஈச்சனாரியை சேர்ந்த குண சேகரன் (19), செட்டிப் பாளையத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (19) என்பதும், நண்பர்களான அவர்கள் செட்டிப்பாளையத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.