districts

img

தென்னிந்திய அளவிலான கபடிப் போட்டி

திருப்பூர், செப். 26 – திருப்பூரில் திருமூர்த்தி நினைவு ஸ்போர்ட்ஸ் கிளப் சார் பில் தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள்  கபடிப் போட்டி நடைபெற்றது. இதில் இரு பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 112 அணிகள் பங்கேற்றன. திருப்பூர் வெள்ளியங்காடு 60 அடி ரோடு கபடி கணேசன்  நினைவுத் திடலில் சனி, ஞாயிறு இரு நாட்கள் இப்போட்டிகள்  நடைபெற்றன. தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநி லங்களில் இருந்து ஆண்கள் பிரிவில் 84 அணிகளும், பெண் கள் பிரிவில் 28 அணிகளும் இதில் கலந்து கொண்டன. நாக்  அவுட் முறையில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாநகராட்சி மேயர்  ந.தினேஷ்குமார், துணை மேயர் எம்.கே.எம். ஆர்.பாலசுப்பிர மணியம், முன்னாள் எம்எல்ஏ சு.குணசேகரன் உள்பட முக்கிய  பிரமுகர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்ற கபடி  வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். இதில் ஆண்கள் பிரிவில் தூத்துக்குடி துரைசிங்கம் அணி  முதல் பரிசையும், காசர்கோடு ஜெ.கே.அகாடமி இரண்டாம்  இடத்தையும், திருப்பூர் மாவட்ட அணி மூன்றாம் இடத்தை யும், சென்னை யுனிவர்சிட்டி அணி நான்காம் பரிசையும் வென் றனர். பெண்கள் பிரிவில் ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வி.கே.சி  அணி முதல் பரிசையும், மதுரை பிஆர்சி இரண்டாமிடத்தை யும், ராணிப்பைட்டை அணி மூன்றாமிடத்தையும், ஒட்டன் சத்திரம் எஸ்.எம்.வி.கே.சி. பி அணி நான்காம் பரிசையும் பெற் றனர்.

;