இளம்பிள்ளை, டிச.6- சாயப்பட்டறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், மகுடஞ்சா வடி அடுத்த காளிகவுண்டம் பாளைம், இடையன்காடு , செட்டி யூர் பகுதியில் தனியார் நிறுவனத் தினர் சாயப்பட்டறை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின் றனர். இந்நிலையில் திங்களன்று மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் மனு அளிக்க 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். அப் போது திடீரென அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சங்ககிரி கோட்டாட்சியர் வேடியப் பன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறு கையில், கடந்த 2012 ல் செட்டியூர் பகுதியில் தனியார் விசைத்தறி கூடம் அமைப்பதாக அனுமதி பெற்றனர்.
ஆனால், அதிகாரிக ளிடம் தவறான தகவல்களை அளித்து தறிகூடத்திற்கு அனுமதி பெற்றபிறகு தற்போது சாயப் பட்டறை திறக்க உள்ளனர். இத னால், எங்களது விவசாய நிலம், நிலத்தடி நீர் பெரிய அளவில் பாதிக்கப்படும் என ஆவேசமாக தெரிவித்தனர். இதையடுத்து இப்பிரச்சனை சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட் டாட்சியர் உறுதி அளித்தார். முன்னதாக, கடந்த நவ.25 ஆம் தேதியன்று சாயப்பட்டறை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மின் கம்பம் நடும் பணிகளை தடுத்து நிறுத்தி முற் றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர். அப்பொழுது அங்கு வந்த சங்ககிரி கோட்டாட்சியர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இவ்விடத்தில் சாயப் பட்டறை பணிகள் நடைபெறாது என ஏற்கெனவே உறுதி அளித் தார். ஆனால், இதனையும் மீறி தற் போது சாயப்பட்டறைகள் அமைக் கும் பணிகள் நடைபெற்று வரு வதால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.