districts

பழமொழி

 

பேச்சு வழக்கில் வெளிப்படும் தொடர்கள்
மக்கள் மனங்களில் மலரும் மலர்கள்
வீச்சாய் வலம்வரும் அவைதாம் பழமொழி
சொலவடை என்றும் அழைக்கும் நல்மொழி

பள்ளியில் படிக்காத பாமர மக்களும்
பேசும் மொழியில் இயல்பாய் வருவன
துள்ளிவரும் நீராய் மனப்பயிர் பாய்வன
கேட்பதற் கினியவை மனதில் பதிவன

பழமொழி சொலவடை எல்லாம் ஒன்றே
இளையோர் முதியோர் ஆடவர் பெண்டிர்
பேசுமொழி வேற்றுமை இலாது பரவிடும்
சிறுகதை இலக்கியந் தன்னிலும் வேர்விடும்

- பெரணமல்லூர் சேகரன்

;