districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மக்னா யானையை பிடித்திடுக வனத்துறை அலுவலகம் முற்றுகை

கோவை, ஜூலை 4- மக்னா யானையை பிடிக்க வலியுறுத்தி பொள்ளாச்சி யில் உள்ள வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரியிலிருந்து பிடித்து வரப்பட்ட மக்னா யானை, டாப்சிலிப் வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டது. அந்த  யானை அங்கிருந்து பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்தது. இதன்பின் அங்கிருந்து பிடித்து மானாம்பள்ளியில் விடப்பட்ட யானை, கடந்த ஏப்ரல்  மாதம் சேத்துமடை பகுதிக்கு வந்தது. தற்போது அந்த யானை  சரப்பதி பகுதியில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிக்கு இரவு நேரங்களில் வந்து சேதத்தை ஏற்படுத்தி வரு கிறது. இந்நிலையில், மக்னா யானையை பிடித்து கும்கியாக  மாற்ற வலியுறுத்தி பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து பொதுமக்களிடம் உதவி வன பாதுகாவலர் செல்வம் பேச்சுவார்த்தை நடத் தினார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த 4 மாதங்களாக மக்னா யானை சுற்றித்திரிந்து வரு கிறது. தென்னை, மா, வாழை மற்றும் பந்தல் காய்கறி களை சேதப்படுத்தி உள்ளது. ரூ.4 லட்சம் செலவு செய்து போடப்பட்ட கம்பி வேலியை கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடைத்து விட்டது.

பயிர்களை சேதப்படுத்திய யானை, தற் போது குடியிருப்புக்குள் வர தொடங்கி விட்டது. வனத் துறையினர் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு  கொடுப்பதில்லை. யானையின் நடமாட்டத்தை கண் காணித்து, அது வரும் போது பொதுமக்களுக்கு தகவல்  கொடுப்பதில்லை. கும்கி யானையை கொண்டு வந்து கட்டி  வைத்தும் எந்த பயனும் இல்லை. மக்னா யானையை பிடிக்க  எந்த நடவடிக்கையும் இல்லை. ஏதாவது உயிர்சேதம் ஏற்பட்ட  பிறகு தான் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?. அந்த யானையை பிடித்து வனப்பகுதியில் விட்டால் திரும்ப வரக் கூடும். எனவே, யானையை பிடித்து கும்கியாக மாற்ற வேண்டும். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சரப்பதி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள்  ஒன்று சேர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்துவோம், என்றனர். இதையடுத்து உதவி வனபாதுகாவலர் செல்வம் பேசு கையில், மக்னா யானையை வனத்துறையினர் கண் காணிப்பதில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்றே தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலாக ஆட்களை நியமித்து பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்படும். யானை வருகிற பாதை குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். யானையை பிடிக்க வேண்டும் என்பது குறித்த கோரிக்கை உயர்  அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அனுமதி கிடைத் ததும் யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என் றார். 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி

கோவை, ஜூலை 4- கோவையில் முதல் நிலை வாக்குப்பதிவு இயந்திரங்கள்  சரிபார்ப்பு பணிகள் செவ்வாயன்று துவங்கியது.  நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பணிகள் துவங்கியுள்ளன.  அதன் தொடர்ச்சியாக, கோவை மாவட்டத்தில் முதல் நிலை  வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் துவங்கி யுள்ளது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள 17,160 வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் சரிபார்ப்பு பணியினை கோவை மாவட்ட ஆட்சியர்  கிராந்திகுமார் பாடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  மேலும் இப்பணிகளை ஆய்வு செய்ய, தில்லியில் இருந்து  ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவும் வந்துள்ளது. இந்த பணி களில் ஏதேனும் இயந்திர கோளாறுகள் இருந்தால் அவை  சரிசெய்யப்படும்.  இப்பணிகள் 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை  முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பொருத்தப் பட்டுள்ளன. கூடுதலாக பாதுகாப்புக்கு காவலர்கள் பணிய மர்த்தப்பட்டுள்ளனர்.  இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குணசேகரன், வருவாய் கோட்டாட்சியர் பண்டரி நாதன், தெற்கு வட்டாட்சியர் விஜயலட்சுமி மற்றும் அரசியல்  கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் உடனிருந்தனர். 

தோட்டத்துபாளையம் சிபிஎம் கிளை  அலுவலக கட்டட அடிக்கல் நாட்டு விழா

திருப்பூர், ஜூலை 4 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோட்டத்துபாளையம்  கிளை அலுவலக கட்டட அடிக்கல் நாட்டு விழா ஞாயிறன்று  நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோட்டத்துபாளையம்  கிளை செயலாளர் ஈ.மங்கலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த அடிக்கல் நாட்டு விழாவில் ஏ.மகேந்திரன் வரவேற்றார்.  மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் புதிய கிளை அலுவலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். கட்சியின் அலுவலகம்  கட்ட நிலம் வழங்கிய எஸ்.ஆர்.வி. குழுமத்தலைவர் எஸ். பாலுசாமி, வேலுகுமார் பிளீச்சிங் உரிமையாளர் கே.முருக சாமி மற்றும் லட்சுமி ரியல் எஸ்டேட் உரிமையாளர் எம்.கருப்பு சாமி ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர்.  இதில், மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், வடக்கு  ஒன்றிய செயலாளர் ஆர்.காளியப்பன், காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினர் ஏ.ராமசாமி உள்பட பல்வேறு கட்சி பிர முகர்கள், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பி னர்கள் ஆ.சிகாமணி, ஆர்.மைதிலி, ஒன்றியகுழு உறுப்பினர் கள் பி.மகாலிங்கம், என்.இளங்கோ, சி.பானுமதி, கிளை செய லாளர்கள் எஸ்.கே.பழனிச்சாமி ஆர்.பாலசுப்பிரமணியம்,  எம்.தன்ராஜ், எம்.சந்திரன், சி.ராஜன் உட்பட திரளானோர்  பங்கேற்றனர். கூலிப்பாளையம் பகுதியில் 2 தீக்கதிர் ஆண்டு  சந்தாக்கள் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.

தண்டவாளத்தில் செல்ஃபி எடுத்த இளைஞர்கள் இருவர் ரயில் மோதி பலி

திருப்பூர், ஜூலை 4 – திருப்பூர் அணைப்பாளையம் பகுதி யில் மது போதையில் ரயில்வே தண்ட வாளம் அருகே செல்ஃபி எடுத்த இளை ஞர்கள் இருவர் விரைவு ரயிலில் சிக்கி  உடல் சிதைந்து உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பாண் டியன் (23) மற்றும் விஜய் (24) இருவரும்  திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் குடி யிருந்து கொண்டு அப்பகுதியில் உள்ள  நிட்டிங் நிறுவனத்தில் கடந்த ஒரு வருட  காலமாக பணியாற்றி வந்தனர். இதனி டையே ஞாயிறு விடுமுறை என்பதால், பாண்டியனும் விஜய் இருவரும் தங் கள் சக  நண்பர்களிடம், ரயில் நிலையம்  சென்று ரயில் முன் நின்று செல்ஃபி எடுத்து அனுப்புவதாக கூறிச் சென்றுள் ளனர். அதன்பிறகு, திருப்பூர் அணைப்பா ளையம் சாலையில் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு வந்த விஜய் யும், பாண்டியனும் மதியம் 2.10 மணியள வில் அவ்வழியே வந்த திருநெல்வேலி –  பிளாஸ்பூர் விரைவு ரயில் முன் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி இருவரும் ரயில் முன் விழுந் தனர். ரயிலின் வேகத்தால் தூக்கி வீசப் பட்ட இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள்  கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத் திற்கு வந்த ரயில்வே போலீசார் பாண்டி யன் மற்றும் விஜய் இருவரின் உடல் களை மீட்டு, பிரேத பரிசோதனைக் காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இரு வரும் மது போதையில் தண்டவாளத் தில் நின்று செல்ஃபி எடுத்ததால் ரயி லில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே  இறந்ததாக ரயில்வே இருப்புப்பாதை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதேபோல் கடந்த மார்ச் 13 அன்று  சேலம் வாழப்பாடி அருகே ரயில்வே இருப்புப் பாதையில் காங்கேயன் (22)  என்பவர் செல்ஃபி எடுக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு உயிரிழந் தார். எனவே ரயில் பயணிகள் மற்றும் பொது மக்கள் தண்டவாளத்தில் நடந்து  செல்வது, விளையாடுவது, விளம்பர மோகத்தில் செல்ஃபி எடுப்பது போன்ற  செயல்களில் ஈடுபட்டு தங்கள் விலை மதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுகி றது. மேற்கண்ட தவறுகளை செய்ய  வேண்டாம் என்று ரயில்வே இருப்புப் பாதை காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் பயணிகள்  பாதுகாப்பு சம்பந்தமான புகார்களுக்கு  இருப்புப்பாதை காவல் உதவி மையம்  1512 மற்றும் வாட்ஸ் ஆப் எண் 99625  00500 என்ற எண்களில் தொடர்பு  கொள்ளுமாறும் ரயில்வே இருப்புப் பாதை காவல் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடுகபாளையம் பட்டா இடத்துக்கு என்.ஓ.சி. தாமதிப்பதா? 24 இல் ஆர்ப்பாட்டம் நடத்த கைத்தறி சங்கம் முடிவு

திருப்பூர், ஜூலை 4 - பல்லடம் அருகே வடுகபாளையத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கியுள்ள நிலத்திற்கு தடையின்மை சான்றிதழ் வழங்க  தாமதிக்கும் வருவாய் துறையை கண்டித்து  ஜூலை 24இல் ஆர்ப்பாட்டம் நடத்த சிஐடியூ  கைத்தறி நெசவாளர் சங்கம் முடிவு செய் துள்ளது. திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்க கமிட்டி கூட்டம் கே.திருவேங்கடசாமி தலைமையில் செவ்வாய்கிழமை நடைபெற் றது. இதில் சிஐடியூ மாவட்ட துணை தலை வர் உன்னிகிருஷ்ணன், சங்க செயலாளர் என். கனகராஜ், பல்லடம் வை.சுப்பிரமணி, கணக்கம்பாளையம் மனோகரன், பாண்டி யன் நகர் கோபால், பல்லடம் அருள்புரம் மகேஷ் மற்றும் ராமநாதன் ஆகிய நிர்வாகி கள் கலந்து கொண்டனர். கைத்தறி நெசவுத் தொழில் நிலைமை களை விவாதம் செய்து தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கைத்தறி நெசவாளர்க ளுக்கு கூலி வெகுவாக குறைத்து, நெசவு  நெய்வதற்கு பாவும், ஊடு நூலும் தருவ தில்லை. எனவே கைத்தறி நெசவாளர்கள்  மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மத்திய, மாநில அரசாங்கங்கள் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும். தொழிலின் மோசமான நிலைமையை கருத்தில் கொண்டு காங்கேயத்தில் இருக்கக் கூடிய, மற்ற கைத்தறி சங்கங்களையும் இணைத்து் ஒரு பிரம்மாண்டமான ஆர்ப் பாட்டத்தை நடத்துவது என்று முடிவு செய் யப்பட்டது. பல்லடம் தாலுகா, வடுகபாளையத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் தற்போது வரை தடையின்மை  சான்றிதழ் (என்ஓசி) மாவட்ட வருவாய்த்  துறை அதிகாரிகளால் வழங்கப்படவில்லை. எனவே அதை கண்டித்து வரக்கூடிய 24ஆம்  தேதி திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

குப்பை வரி பற்றி விவாதிக்க அதிமுக வலியுறுத்தல்

திருப்பூர், ஜூலை 4 - திருப்பூர் மாநகராட்சி யில் குப்பை வரி சம்பந்தமாக  விவாதிக்க சிறப்புக் கூட் டத்தை கூட்ட வேண்டும் என்று அதிமுக மாமன்றக் குழு வலியுறுத்தி உள்ளது. அதிமுக குழுத் தலைவர்  அன்பகம் திருப்பதி தலை மையில் அக்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரை திங்களன்று நேரில் சந்தித்து  கோரிக்கை மனு அளித்த னர்.சிறப்புக்கூட்டம் கூட்டு வதுடன், மாநகராட்சி குப்பை  வரி, சொத்து வரி, தண்ணீர் வரி உள்ளிட்டவை குறித்து மேல்முறையீட்டு குழு அமைக்க வேண்டும் என்று கோரினர்.

கருக்கலைப்பு மாத்திரை விற்பனை: இரண்டு மருந்தகங்களுக்கு சீல்

திருப்பூர், ஜூலை 4 - 16 வயது சிறுமி கருக்க லைப்பு மாத்திரை உட் கொண்டு உயிரிழந்த நிலை யில், இது தொடர்பாக மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் கனகராணி தலைமையிலான அதிகாரி கள் ஆய்வு மேற்கொண்டு  வந்தனர். சிறுமிக்கு மாத் திரை விற்பனை செய்த கவிதா மெடிக்கல் சீல் வைக் கப்பட்ட நிலையில் மாவட் டம் முழுவதும் அதிகாரிகள் சோதனையை துவங்கினர். இதில் பல்லடம் அடுத்த சின் னக்கரை பகுதியில் உள்ள  திவ்யா மெடிக்கல் மற்றும்  பெஸ்ட் மெடிக்கல் என்ற இரண்டு மருந்தகங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்த னர்.

சாலையை சீரமைத்து தர கோரி  மார்க்சிஸ்ட் கட்சி மனு

அவிநாசி, ஜூலை 4- அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம் ஊராட்சி பகுதி களில் உள்ள சாலைகளை சீரமைத்து தர வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று மனு அளித் துள்ளனர். அவிநாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு  உட்பட்ட பெரியகருணை பாளையம், சின்ன கருணைபாளை யம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து  வருகின்றனர். அவிநாசி மங்கலம் சாலை முதல் அய்யனார்  கோவில் பாலம் வரை, பெரிய கருணை பாளையம் பேருந்து  நிறுத்தம் முதல் பைபாஸ் சாலை வரை குடிநீர் குழாய் பதிப் பதற்காக பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டுள்ளது. இத னால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க நேரிடு கிறது. பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைத்து  தருமாறு ஊர் பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கருணைபாளையம் கிளையின் தலைமையில் ஊராட்சி  ஒன்றிய ஆணையாளர், வேலாயுதம்பாளையம் ஊராட்சி  மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் உள்ளிட் டவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இம்மனு வைப் பெற்றுக் கொண்டு விரைவில் கோரிக்கைகளை நிறை வேற்றித் தருவதாக கூறியுள்ளனர்.  இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செய லாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் பழனிச் சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமியப்பன், விவ சாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சண்முகம், கட்டிட  கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜன்,  நாகராஜ், கிளைச் செயலாளர்கள் மற்றும் முன்னணி நிர்வா கிகள் பலர் கலந்து கொண்டனர்.

உடைந்து விழுந்த ரயில்வே கிராசிங் கேட்

சேலம், ஜூலை 4- சேலம் அணைமேடு பகுதியில் உள்ள ரயில்வே கிராசிங்  கேட் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட் டது. சேலம் அணைமேடு பகுதியில் ரயில்வே கிராசிங் கேட் உள்ளது. இந்த ரயில் வழித்தடத்தில் சென்னை, விருத்தா சலம், ஆத்தூர், காரைக்கால் செல்லும் பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், அவ்வப்போது சரக்கு ரயில்களும் இந்த வழியாக செல்கின்றன. ரயில்கள் கடக்கின்ற போது லெவல் கிராசிங் கேட் மூடப்படுவது வழக்கம். இந்நிலை யில், செவ்வாயன்று சேலம் ஜங்ஷனிலிருந்து விருத்தாசலம் வழியாக காரைக்கால் செல்லும் ரயில் வந்தது. அதற்காக லெவல் கிராசிங் போடப்பட்டது. அதன்பிறகு ரயில் கடந்த  பிறகு கேட்டை திறக்கும்பொழுது கிராசிங் கேட் முறிந்து கீழே  விழுந்தது. நல்வாய்ப்பாக வாகன ஓட்டிகள் யாரும் இல்லாத தால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து அந்த பாதைகள் அடைக்கப்பட்டு ஆத்தூர் மற்றும் சென்னை உள் ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் வாக னங்களை மாற்றுப்பாதையில் சேலம் புதிய பேருந்து நிலை யம் செல்வதற்கு அனுமதித்தனர். இதனால் மாநகரப் பகுதி களில் முள்வாடி கேட் சுந்தர்லாட்ஜ் ஆட்சியர் அலுவலகம் என பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. முறிந்து விழுந்த ரயில்வே கிராசிங் கேட்டை  சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வரு கின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப் பட்டுள்ளது. இதேபோல அடிக்கடி சேலம் மாநகரப் பகுதிகளில் உள்ள ரயில்வே கிராசிங் கேட் பழுதடைந்து முறிந்து விழுகிறது. இத னால் பொதுமக்கள் ரயில்வே கிராசிங் கேட்டை கடக்கின்ற போது அச்சத்துடனே கடக்கும் நிலை உருவாகியுள்ளது.

காட்டெருமை தாக்கி தொழிலாளி பலி

உதகை, ஜூலை 4- நீலகிரியில் பாலகொலா, அதிகரட்டி, நுந்தளா உள் ளிட்ட பல்வேறு கிராம பகுதி களில் உள்ள தேயிலை தோட் டங்களில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து காணப் படுகிறது. இந்நிலையில், உதகையை அடுத்த பால கொலா கிராமத்தில் வசிப்ப வர் சுப்ரமணி. இவர் வழக்கம் போல் பணிக்கு சென்றுள் ளார். திங்களன்று இரவு அவர் வீட்டிற்கு வராததால், அவ ரது உறவினர்கள் தேடினர். இந்நிலையில், செவ்வா யன்று காலை தேயிலை தோட் டத்தில் காட்டெருமை தாக்கி  சம்பவ இடத்திலேயே பரிதா பமாக உயிரிழந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, உடலை மீட்ட கிராம மக் கள் பிரேத பரிசோதனைக் காக உதகை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். இதுகுறித்து காவல் துறையினர் மற்றும் வனத் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.