கோபி, ஜன.31- ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபா ளையத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில், நடைபெற்று வரும் புதிய வளர்ச்சி திட்ட பணிகளை, மாவட்ட ஆட்சி யர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற் கொண்டார். தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சேவை கள் பொதுமக்களுக்கு விரைந்து சென்ற டைவதை உறுதி செய்யும் வகையில், உங் களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்ததைத் தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் பகுதியில் நடை பெற்று வரும் புதிய வளர்ச்சி திட்டப்ப ணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால்சுன்கரா ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுகுடிநீர் திட்டத்தின் நீரேற்று நிலையத் தில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்க ளுக்கு வினியோகிப்படும் தண்ணீரின் அளவு குறித்தும் செயல்பாடுகள் குறித்து அலுவ லர்களிடம் கேட்டறிந்தார். இதனைத்தொ டர்ந்து, விளாங்கோம்பை துணைமின்நி லையம், லக்கம்பட்டி கால்நடை பன்முக மருத்துவமனை, வேளாண்துறையின் கரும்பு ஓட்டுண்ணி வளர்ப்பு நிலையம், நகராட்சி பகுதியில் அங்கன்வாடி மையம், தொடக்கபள்ளி உள்ளிட்ட பல்வேறு பகு திகளில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறி வுறுத்தினார் இதனையடுத்து, கோபி வருவாய் வட்டாச்சியர் அலுவலகத்தில் நேரில் பார்வையிட்டு அங்கு பராமரிக்கப் படும் அலுவலக பதிவேடுகளை ஆய்வு செய்தார். முன்னதாக விளாங்கோம்பையில் நடைபெற்ற மனுநீதி முகாமில் மலைவாழ் மக்களுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நல திட்ட உதவிகளை வழங்கினார்.