districts

img

அறிவியல் இயக்க முப்பெரும் விழா

திருப்பூர், ஏப்.9 - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் தெற்கு கிளை சார்பாக முப்பெரும் விழா சனியன்று நடைபெற்றது.  விழாவிற்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் கனகராஜா தலைமை ஏற்றார். திருப்பூர் தெற்கு வட்டார இல்லம் தேடி கல்வி ஒருங்கி ணைப்பாளர் லிங்கராஜ், ராயபுரம் பள்ளியின் தலைமை ஆசிரியரும், மாநில நல்லாசிரியர் விருது பெற்றவரான அங்கு லட்சுமி  முன்னிலை வகித்தனர். வானவில் மன்ற கருத்தாளர்  கலையரசி வரவேற்றார். முப்பெரும் விழாவில், மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்  அண்ணா துரை, அறிவியல் இயக்க மாநில துணைச்செயலாளர் முஹப்பூ நிஷா சிறப்புரை நிகழ்த்தினார்.  உலக சுகாதார தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விநாடி - வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்  வழங்கியும், இல்லம் தேடி கல்வியில் சிறப்பாக செயல்பட்டு  வரும் 57 தன்னார்வலர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றி தழ்களும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது. இதை யடுத்து, திருப்பூர் தெற்கு வட்டாரத்தில் அறிவியல் இயக் கமும் துவக்கப்பட்டது. முடிவில் வானவில் மன்ற கருத் தாளர் பூவிழி நன்றி கூறினார்.