districts

img

விரைவில் பள்ளிகள் திறப்பு: சீருடைகள் விற்பனை தீவிரம்

நாமக்கல், மே 20- - எம்.பிரபாகரன் - கோடை விடுமுறை முடிந்து பள்ளி கள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவ, மாணவிகளுக்கான சீருடை கள் விற்பனை தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச்,  ஏப்ரல் மாதத்தில் அரசு மற்றும் தனி யார் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நிறைவு பெற்று, தற்போது மாணவ மாணவியர் தேர்ச்சி விகிதம் உள்ளிட் டவை வெளியாகி உள்ளது. தற்போது  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப் பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன் 4 ஆம்  தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க் கப்படும் நிலையில், பெற்றோர்கள் தற் போது கல்வி உபகரணங்களை வாங்கு வதற்கான ஆயத்தப் பணியில் ஈடுபட் டுள்ளனர். இதனிடையே, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் சுற்றுவட் டாரப் பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடை களில் பள்ளி சீருடை விற்பனை கணிச மாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில்  தையல் கடைகளில் அரசு மற்றும் தனி யார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் புதிதாக பள்ளி சீருடை களை தைப்பதற்கு ஆர்டர் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து பள்ளிபாளையம் - சங்க கிரி சாலையில் செயல்படும் ஜவுளிக் கடையைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளுக் கும் மேலாக தையல் தொழிலை மேற் கொண்டு, அதன் பிறகு படிப்படியாக ஜவுளிக்கடையை ஆரம்பித்தேன். அப் போதிலிருந்து இப்போது வரை தையல் தொழிலை தொடர்ச்சியாக மேற் கொண்டு வருகிறேன். ஒவ்வொரு ஆண் டும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் தேர்வுகள் நிறைவு பெற்று மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை விடப்படும். அதன் பிறகு ஜூன் மாத துவக்கத்தில் பள்ளி கள் திறக்கப்படுவது வழக்கமான ஒன் றாகும். தற்போது இந்தாண்டு நாடா ளுமன்ற தேர்தல், கோடை விடுமுறை  விடப்படும் மாதத்திலேயே நடைபெற் றுள்ளதால், ஜூன் மாதம் 2 ஆவது வாரம்  பள்ளிகள் திறக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில், அரசு மற்றும் தனியார்  பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவி யர் அதிகளவு சீருடைகளை தைப்பதற் காக ஆர்டர் கொடுத்துள்ளனர். பொதுவாக அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அரசின் சார் பில் இலவச பள்ளி சீருடை வழங்கப் பட்டு வருகிறது. அதிகபட்சமாக 10 ஆம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவ,  மாணவியர் அதிகளவு சீருடைகளை  தைப்பதற்காக எங்களிடம் வந்து கொடுக் கின்றனர். ஏனெனில் அரசின் சார்பில் இலவசமாக பள்ளி சீருடை வழங்கப்பட் டாலும், சில நேரங்களில் அது அவர்க ளது உடலமைப்புக்கு ஏற்றவாறு இல் லாத நிலை இருப்பதால் எங்களிடம் புதிதாக துணிகளை கொடுத்து தைக்கச் சொல்கிறார்கள். ஒரு சிலர் எங்கள் கடைகளிலேயே விற்பனையாகும் ரெடிமேடு உடைகளையும் வாங்கி செல் கின்றனர். பள்ளிபாளையம் சுற்றுவட்டா ரப் பகுதியில், அதிகளவு தனியார் பள் ளிகள் இயங்கி வருவதால், பள்ளிக்கு  முதல் முறையாக சேரும் எல்கேஜி, யுகேஜி குழந்தைகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ, மாணவிய ருக்கு புதிதாக உடைகள் தைக்க வேண் டும் என பெற்றோர்கள் எங்களிடம் பள்ளி சீருடை உடைகளை கொடுத்து தைக்கச் சொல்கிறார்கள். அதிகபட்சம் இன்னும் இரண்டு வார காலத்திற்குள் பள்ளிகள் திறக்கப்பட லாம் என்பதால் மாணவ, மாணவிக ளின் பெற்றோர்கள் இப்போதிலிருந்தே அவர்கள் கல்வி கற்க தேவையான அனைத்து விதமான கல்வி உபகரணங் களான பேக்குகள், ஸ்டேஷனரி பொருட் கள் ஆகியவற்றை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். பள்ளி மாணவ மாணவியரின் சீருடை தைக்கும் ஆர்டர் மூலமாக கணிசமான தையல் தொழிலா ளர்கள் தற்போது வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். தொடர்ந்து இந்த மாதம் முழுவதும் வேலை வாய்ப்பு இருக் கும் என்பதால் தொழிலாளர்கள் உற்சா கத்துடன் தொழிலை மேற்கொண்டு வரு கின்றனர், என்றார்.

;