districts

img

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சேலம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சேலம், செப்14- சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக வட்டார செயல்முறைக் கிடங்கில்  மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் மொத்தம் 9 வட்ட செயல்முறை கிடங்கு கள் செயல்பட்டு வருகின்றன. இயற்கை சீற்றம் மற்றும் பேரிடர்  காலங்களில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகத்தினை போர்க்கால அடிப்படையில் நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள 9 வட்ட செயல்முறை கிடங்கு கள் மூலம் பொது மக்களுக்கு தேவையான குடிமைப் பொருள் மாதம் ஒன்றிக்கு 16,293 மெ.டன் அரிசி, 1462 மெ.டன்  சர்க்கரை, 295 மெ.டன் கோதுமை, 899 மெ.டன் துவரம் பருப்பு,  9,17,708 பாமாயில் பாக்கெட்கள் அரசால் ஒதுக்கீடு செய்யப் பட்டு, மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் பொது விநியோகத்  திட்டத்தின் கீழ் இயங்கி வரும் 1,541 அங்காடிகளுக்கு சீராக  விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 2021-2022 கொள்முதல்  பருவத்தில் 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப் பட்டு 16,563 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 2,195 சத்துணவு  மற்றும் 2,618 அங்கன்வாடி மையங்கள் உட்பட 4,813 மையங் களுக்கு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலமாக உணவுப்பொருள் விநியோகம் செய்யப்படுகிறது. காவலர்,  சிறைத்துறை, வனத்துறை, தீயணைப்புத் துறை, அம்மா  உணவகம், அரசு மருத்துவமனை, அரசு விடுதிகள், தொண்டு  நிறுவனங்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற அரசு ஆதர வற்றோர் பராமரிப்பு மையங்கள் உணவுப்பொருட்கள் விநி யோகம் செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரி வித்தார்.

;