சேலம், ஏப்.6- சேலம் மாநகராட்சியின் 2023 - 24ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மாநகர மேயர் ராமச்சந்திரன் தலைமை யில் நடைபெற்ற கூட்டத்தில், மண் சாலை இல்லாத மாநகராட்சியை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி மன்றத்தில் 2023 - 24 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் வியாழ னன்று தாக்கல் செய்தார். இதில், முக்கிய அம்சங்களாக மருத்து வத்திற்கும், பள்ளிக்கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட் டுள்ளது. மேலும், மாநகராட்சியில் உள்ள அனைத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தவும், சேலம் மாநகராட்சியில் மண் சாலை இல் லாத மாநகராட்சி உருவாக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என அறிவிக் கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் உள்ள பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்த 4 கோடி ரூபாய் மதிப்பில் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு முதற்கட்டமாக 2 கோடி செலவில் 6 ஆய்வுக் கட்ட டங்கள், மாணவ, மாணவிகளுக்கு கணினி பயிற்சி மற்றும் இணைய தளங்களை கையாளும் முறை அவசியமென்பதை கருத்தில் கொண்டு ஒரு கோடி ரூபாய் செல வில் 5 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தி தரப்படும்,
சேலம் மாநகராட்சி கட்டுப் பாட்டில் உள்ள பள்ளிகளில் போது மான அளவிற்கு கழிப்பிடங்கள் இல்லாதது, கழிப்பிடங்கள் பராம ரிப்பு இல்லாமல் இருப்பது ஆகிய வற்றை கண்டறிந்து 2 கோடி மதிப் பில் சுகாதார வளாகங்கள் கட்டித் தரப்படும். சேலம் மாநகர பகுதியில் உள்ள விளையாட்டு மைதானங் களை சீர் செய்து, ஒரு கோடி ரூபாய் செலவில் உடற்பயிற்சி சாத னங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும். மாணவர்கள் போட்டி தேர்வினை எளிதில் எதிர் கொள்ளும் வகையில் 50 லட்சம் ரூபாய் செலவில் போட்டி தேர்வு மையங்கள் ஏற்படுத்தி தரப்படும் என கல்விக்காக மட்டும் 10 கோடியே 70 லட்சம் ரூபாய் செல விடப்பட உள்ளது. மாநகர பகுதி மக்களுக்கு 24 மணி நேரமும் மருத்துவ சேவைக் காக மாநகராட்சியின் மருத்துவ மனைகளை மேம்படுத்துவற்காக , சேலம் அண்ணா மருத்துவ மனையில் ஒருங்கிணைந்த நகர்ப் புற நல வாழ்வு மையம் ஏற்படுத்தி , 99 லட்சம் செலவில் முன்மாதிரி மருத்துவமனையாக செயல்படுத் தப்பட உள்ளது. சேலம் மாநகராட்சியில் 16 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்கள், 32 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் ஆகியவற்றிற்கு வரும் நோயாளிகள் மற்றும் அங்குள்ள உபகரணங்களை பாதுகாத்தல் மற்றும் கண்காணித்தல் அவ சியம் என்பதால் 50 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப் படும்.
வெளி மாவட்டத்தில் இருந்து வணிகரீதியாக வரும் மக்கள் மனம் ரசிக்கும் வகையில், நகரில் முக்கிய மான நான்கு ரவுண்டான பகுதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இரண்டு கோடி செலவில் நவீன வசதியுடன் கூடிய சுகாதார வளா கம் ஏற்படுத்தப்படும். மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுக்கு உட்பட்ட அனைத்து பொதுமக்களுக்கு தங்குதடை இன்றி சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யும் முறையை கண்காணிக்க 58 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளில் 60 லட்ச ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் மாநகராட்சி பகுதியில் , மாநகராட்சி சொந்தமான காலி யிடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடத்தில் சுற்றுப்புற சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பொது மக் களின் பங்களிப்புடன் நீரூற்றுக்கள் அமைத்து நகரை அழகு படுத்தப் படும் என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளை மேயர் ராமச் சந்திரன் நிதிநிலை அறிக்கையில் முன்வைத்தார். இந்த பட்ஜெட் கூட்டத்தில் துணை மேயர் சாரதா தேவி, மாநக ராட்சி ஆணையாளர் கிறிஸ்து ராஜ் உள்ளிட்ட மாமன்ற உறுப்பி னர்கள் பங்கேற்றனர். முன்னதாக, பட்ஜெட்டில், மக்க ளுக்கு வாக்குறுதி அளித்த ஏதுவும் இல்லை என குற்றம்சாட்டி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத் தில் இருந்து வெளிநடப்பு செய் தனர்.