districts

img

சேலம்-கோவை பாசஞ்சர் ரயில் ரத்து

சேலம், ஜூலை 2- பராமரிப்பு பணிகள் நடைபெறுவ தால் சேலம்-கோவை பாசஞ்சர் ரயில் ஜூலை மாதம் முழுவதுமாக ரத்து செய் யப்படுகிறது.  சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம் - ஈரோடு மார்க்கத்தில் தண்டவாள சீரமைப்பு பணி மேற்கொள் ளப்படுகிறது. இதனால், இவ்வழியே இயக்கப்படும் சில ரயில்களின் இயக் கத்தில் ரயில்வே நிர்வாகம் மாற்றத்தை  செய்துள்ளது. இதன்படி, கோவை-சேலம் ரயில் (06802), சேலம் - கோவை ரயில் (06803)  ஆகியவை ஞாயிற்றுக்கிழமை முதல்  வரும் ஜூலை 31ஆம் தேதி வரை முழு மையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், பெங்களூரு - கொச்சு வேலி சிறப்பு ரயில்(06084) ஞாயிற் றுக்கிழமை முதல் வரும் ஜூலை 31 ஆம் தேதி வரையில் உள்ள புதன் கிழமைகளில் குறிப்பிட்ட இம்மார்க் கத்தில் 25 நிமிடம் தாமதமாக இயக் கப்படுகிறது.  எனவே, இதனால் ஏற்படும் அசவுரி கத்தை பொறுத்துக் கொள்ளுமாறு  சேலம் ரயில்வே கோட்ட  நிர்வாகத்தின்  சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

;