districts

img

மக்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்குக திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 4– திருப்பூரில் கொரோனா பொது முடக்கத் தின்போது நிறுத்தப்பட்ட நகர மற்றும் புறநக ரப் பேருந்துகளை மக்களின் தேவைக்கு ஏற்ப  கூடுதலாக இயக்க வேண்டும் என வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா பொது முடக்கம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆனபிறகும் முன்பு நிறுத்தப்பட்ட பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை. குறிப்பாக 1ஜி, 3பி/39,  100, 101, 48/53, 1சி, 46ஏ, 6ஏ/2சி, 3ஜி/27, 47டி,  5/7, 1, 106, 11பி/29, ஏ13/ஏ14, 25டி, 11, 11சி/7சி,  சூசையாபுரம், குமரப்பபுரம், இரவு நேரம்  கோவில்வழி முதல் அவிநாசி, கோவில்வழி  முதல் பெருமாநல்லூர் ஆகிய பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் திருப்பூர் – பாலக்காடு காலை  நேரப் பேருந்து நிறுத்தப்பட்டு மாலை மட்டும்  இயக்கப்படுகிறது. கோவை பூண்டி பேருந்து  நிறுத்தப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்தாமல்  செல்கின்றனர். சில பேருந்துகளில் எக்ஸ்பி ரஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே போல் இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் வெவ்வேறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து  என அறிவித்திருக்கும் நிலையில் குறிப்பிட்ட  வழித்தடங்களில் ஓரிரு பேருந்துகள் மட்டுமே  இயக்கப்படுவதால் கூட்ட நெரிசல் அதிக ரித்து பெண்கள், குழந்தைகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அத்துடன் பெண்களை கண் ணியக்குறைவாக சில பேருந்து நடத்துநர்கள்  வசைபாடுவது, பேருந்தை நிறுத்தத்தில் இருந்து தூரத்தில் தள்ளி நிறுத்துவது என சிர மப்படுத்துகின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் இரவு  நேரங்களில் சிறப்புக் பேருந்துகள் இயக்கப்படு கின்றன. ஆனால் திங்களன்று காலை நேரத் தில் கோவை, மேட்டுப்பாளையம், பொள் ளாச்சி, உடுமலை, ஈரோடு செல்லும் பேருந் துகள் குறைவாக இயக்கப்படுகின்றன. இத னால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்குச் செல்வோர், மருத்து வனைக்குச் செல்வோர் கடுமையாக பாதிப் கப்படுகின்றனர். எனவே மக்களின் தேவைக்கு ஏற்ப கூடு தல் பேருந்துகள் இயக்க வேண்டும்,

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண் டும், ஆள் பற்றாக்குறையை போக்கிட வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்களை வேலைக்கு எடுத்து காலி பணியிடங்களை நிரப்பி அனைத்து வழித்தடங்களிலும் பேருந் துகள் இயங்குவதை உத்தரவாதம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி  இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. திருப்பூர் காங்கேயம் கிராஸ் சந்திப்பில் செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணே சன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் தெற்கு மாநகரக்குழு உறுப்பினர்  சி.பானுமதி, வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், வேலம்பாளையம் நகரச்  செயலாளர் ச.நந்தகோபால், தெற்கு ஒன்றி யச் செயலாளர் சி.மூர்த்தி, மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் உள்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தலை மையில் கட்சி நிர்வாகிகள் அரசுப் போக்கு வரத்துக் கழக திருப்பூர் மண்டல பொது  மேலாளரை சந்தித்து கோரிக்கை மனு  அளித்து பேசினர். மக்களின் போக்குவரத்துத் தேவையை ஈடுசெய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். குறிப் பிட்ட காலக்கெடுவில் நடவடிக்கை எடுக்கா விட்டால் அடுத்தக்கட்டமாக மக்களைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் செ.முத்துக்கண்ணன் எச்சரித்தார்.