districts

img

ஆமைக்கே சவால் விடும் சாலைப்பணி: விரைந்து முடிக்க வலியுறுத்தல்

கோவை, நவ. 27– ஆமைக்கே சவால் விட்டு சூலூர் பகுதியில் ஆறு மாதமாய் நடை பெற்று வரும் சாலைப்பணியை விரைந்து முடிக்கக்கோரி மார்க் சிஸ்ட் கட்சியின் தலைமையில் பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளித்த னர். கோவை மாவட்டம், சூலூர் தாலு காவிற்குட்பட்ட காடம்பாடி ஊராட் சிக்குட்பட்டு டிவைன் கார்டன் பேஸ் 2, ராஜலிங்கம் நகர், பாரதி நகர், ஏரோ நகர், நேரு நகர், பாலாஜி அவென்யூ உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வரும் இப் பகுதியில் சாலை வசதி ஏற்படுத் தித் தரக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இங்கு தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு டெண்டர் எடுக் கப்பட்டு பணிகள் துவங்கியது. இத னால் இப்பகுதி மக்களும் விரை வில் தங்களுக்கு சாலை வசதிகள் கிடைக்கப் போகின்றது என்கிற மகிழ்ச்சியில் இருந்தனர்.  ஆனால், ஆறு மாதங்கள் கழிந்த பின்னும் தற்போது வரை அதே நிலையில் இருப்பது பொதுமக்க ளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சூலூர் தாலுகா செய லாளர் எம்.ஆறுமுகம் கூறுகையில், இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே. இதன் ஆரம்ப கட்ட பணிகளை துவக்கிய ஊராட்சி நிர்வாகம், தற்போது அதனை அப்படியே கிடப்பில் போட்டுள்ளது.

இதுகுறித்து கேள்வி எழுப்பினால் ஒவ்வொரு முறையும் உடனே வந்து சாலையில் தண் ணீர் விட்டு ஜல்லி கற்களை போட்டு மண்களை கொட்டி விட்டு பணி களை துவக்குவது போல் நாடகம் நடத்தி வருகின்றனர். ஆறு மாத கால மாய் இப்படியேதான் சாலை பணி கள் உள்ளது.  வழக்கமாக ஆமை வேகத்தில் பணி நடப்பது என்பார்கள். ஆனால், இங்கு ஆமைக்கே சவால் விடும் வகையில் பணிகள் நடக்கிறது. தற் போது நூற்றுக்கணக்கான பொது மக்களிடம் கையெழுத்துகளை பெற்று சூலூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனுக்களை அளித்துள்ளோம். உடனடியாக சாலை போடப்படும் என்கிற உறு தியை அவரும் அளித்துள்ளார்.

இந்த நிலை தொடர்ந்தால் இனி அடுத்த கட்டமாக சூலூர் ஊராட்சி ஒன் றிய அலுவலகத்தின் முன்பு மக் களை திரட்டி போராட்டத்தில் ஈடு படுவோம் என தெரிவித்தார்.  முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சி யின் தாலுகா குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, ரவீந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், வட்டார வளர்ச்சி அதி காரிகளை சந்தித்து மனு அளித்த னர்.