உடுமலை, டிச.9- உடுமலைப் பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதி யில் நெடுஞ்சாலையின் இரு புறங்களும் பல ஆண்டு கள் பழமையான வேம்பமரம், புளியம்மரம் மற்றும் அரசமரங்கள் உள்ளிட்ட நாட்டு ரக மரங்கள் வளர்க் கப்பட்டு வருகிறது. இந்த மரங்களால் அச்சாலை கள் முழுவதும் பசுமையாக காட்சியளித்து வந்தது. இந்த மரங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காய்ந்து போனது இல்லை. ஆனால் சமீபமாக மரங்கள் காய்ந்து போவது அதிகரித்து வருகிறது. இதனால் என்றும் பசுமையாக இருக்கும் சாலைகள் தற்போது பசுமை இழந்து காணப்படுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பல வருடங்களுக்கு முன்பு மக்களுக்கு பயன்படும் வகையில் சாலையின் இரு புறங்களிலும் மரங் கள் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது சில சுய நலவாதிகள் மரங்களில் ஓட்டை போட்டு அதில் அமி லத்தை ஊற்றி விடுகிறார்கள். இதனால் மரங்கள் இயற்கையாக காய்ந்து விடுவதுபோல் ஆகி விடுகிறது. பின்னர் காய்ந்த மரத்தை அரசு அனுமதி யுடன் வெட்டிவிடுகிறார்கள். ஆகவே, இதுபோன்று மரத்தில் அமிலத்தை ஊற்றி அதனை வெட்டி கடத்தும் நபர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டி பலமுறை கோரிக்கை புகாரளித்தும் இன்றுவரை அதிகாரிகள் எவ்வித அக் கறையும் செலுத்தவில்லை. அதுவும், ஒரு மரத்தை வெட்டும் போது புதிதாக மரங்கன்றுகள் நட வேண்டும் என்ற அடிப்படையை கூட அதிகாரிகள் அமல்படுத்து வது இல்லை. இவ்வாறு மரங்களை வெட்டும் நிலை தொடர்ந்தால் என்றும் பசுமையாக இருக்கும் சாலை கள் பாலைவனம் போல் மாறிவிடும் என வேதனை தெரிவிக்கின்றனர்.