districts

img

சாலை பணியாளர்கள் வெண்ணிற கொடியேந்தி கவன ஈர்ப்பு இயக்கம்

தாராபுரம், செப். 7- தாராபுரத்தில் சாலை பணியாளர்  சங்கம் சார்பில் சாலை பணியாளர் களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வெளியிட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெண்ணிற கொடியேந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில்  பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தாராபுரம் நெடுஞ்சாலைத் துறை கோட்டபொறியாளர் அலுவல கம் முன்பு கோட்ட தலைவர் கே. வெங்கிடுசாமி தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் தின் போது கைகளில் வெண்ணிற  கொடிகளை ஏந்தி, சாலைப்பணியா ளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை  பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கவேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக் குரிய ஊதியம் ரூ.5 ஆயிரத்து இரு நூறு, ரூ.20 ஆயிரத்து இருநூறு. தர  ஊதியம் ரூ. ஆயிரத்து 900 வழங்க வேண்டும். மேலும் சாலைப்பணியா ளர்களில் இறந்தோரின் வாரிசுகள் கருணை அடிப்படையில் பணி நிய மனம் கேட்டு விண்ணப்பித்தவர் களுக்கு பணி வழங்கவேண்டும் உள் ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின்  மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிர மணியன், மாநில பொது செயலாளர்  ஆ.அம்சராஜ், கோட்ட செயலாளர்  இல.தில்லையப்பன், அரசு ஊழியர்  சங்க மாவட்ட துணைத்தலைவர் எஸ். முருகதாஸ், மாவட்ட இணைச் செய லாளர் எம்.மேகலிங்கம், வட்டக் கிளை தலைவர் கே.செந்தில்குமார், சாலைப்பணியாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.செல் வக்குமார், கோட்டத்துணை தலை வர்கள் வி.தங்கவேல், சி.மாரிமுத்து, கோட்ட இணைச் செயலாளர்கள் என்.சிவக்குமார், எ.மணிமொழி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்ட பொருளாளர் எஸ்.முருகசாமி நன்றி  தெரிவித்தார். 

திருப்பூர்

 நெடுஞ்சாலைத் துறை கோட்டப்  பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த இயக்கத்துக்கு சாலைப் பணியாளர் சங்க கோட்டத் தலைவர் எஸ்.அண்ணாதுரை தலைமை வகித்தார். இதில் மாநிலத்  தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் தொடக்கவுரை ஆற்றினார். கோட்டச்  செயலாளர் ஆர்.ராமன் விளக்கவுரை  ஆற்றினார். முடிவில் மாநிலப் பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ் நிறைவுரை ஆற்றினார். கோட்டப் பொருளாளர் ஆர்.கருப்பன் நன்றி கூறினார்.