ஈரோடு, செப்.29- வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியு றுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கத் தின் சார்பில் முதல்வர், அமைச்சர் ஆகியோருக்கு தபால் அனுப்பும் இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் 8 ஆவது மாநில மாநாட்டின் தீர்மானத் தின்படி, சாலைப்பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்கால மாக முறைப்படுத்த வேண்டும். உயி ரிழந்த சாலைப்பணியாளர் குடும்ப வாரிசுகளுக்கு கருணை அடிப்படை யில் பணி வழங்க வேண்டும். நெடுஞ் சாலைத்துறையில் காலியாக உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலை பராமரிப்பு பணியை, கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என வலியுறுத்தி சாலைப்பணியாளர் தங்களது குடும் பத்தோடு தமிழ்நாடு முதல்வர், நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் ஆகியோ ருக்கு தபால் அனுப்பும் இயக்கம் நடைபெற்றது. அதன்படி ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத் தில் நடைபெற்ற இந்த இயக்கத்திற்கு சங்கத்தின் உட்கோட்ட தலைவர் கே. முருகன் தலைமை வகித்தார். இதில் மாநிலச் செயலாளர் சுசெந்தில்நா தன், கோட்டத் தலைவர் என்.முருக வேல், கோட்டப் பொருளாளர் ஆர்.முருகன், உட்கோட்டச் செயலாளர் ஆர்.முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், உட்கோட்டப் பொருளாளர் எஸ்.சரவணக்குமார் நன்றி கூறினார். சேலம் இதேபோன்று சேலம் மாவட்டம், ஓமலூர் தபால் நிலையம் முன்பு நடை பெற்ற இயக்கத்திற்கு, சங்கத்தின் நிர் வாகி கே.எம்.வெங்கடேசன் தலைமை வகித்தார். இதில் கோட்டச் செயலா ளர் தா.கலைவாணன் அந்தோனி, உட்கோட்டச் செயலாளர் சி.ராஜசேக ரன், துணைத்தலைவர் பொ.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.