நாமக்கல், அக்.10- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஶ்ரீ ராகவேந் திரா பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நல பணி திட்டம் மற்றும் குமாரபாளையம் சாலை போக்குவரத்து துறை இணைந்து போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு, கல்லுரி முதல்வர் முனைவர் செ.விஜய குமார், மற்றும் குமாரபாளையம் சாலை போக்குவரத்து துறை அதிகாரி பூங்குழலி, மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் தலைமை ஏற்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை நாட்டு நல பணி திட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரி யர்கள் செய்திருந்தனர்.