districts

img

மருத்துவப்படியை உயர்த்தி வழங்க ஆர்எம்எஸ் ஓய்வூதியர் கோரிக்கை

தருமபுரி, செப்.26- மருத்துவப்படியை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என அகில இந்திய அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதி யர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அகில இந்திய அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கத்தின் 4 ஆவது தரும புரி மாவட்ட மாநாடு நெசவாளர் கால ணியில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் மாவட்ட தலைவர் ஆர்.நடரா ஜன்‌ தலைமையில் நடைபெற்றது. சங் கத்தின் கொடியை எம்.ரத்தினம் ஏற்றி  வைத்தார். சி.சந்திரசேகரன் வரவேற் றார். சங்கத்தின் ஆலோசகர் ஆர்.கே. கண்ணன் மாநாட்டை துவக்கி வைத்து  உரையாற்றினார். அறிக்கைகளை மாவட்ட செயலாளர் பி.சுப்பிரமணியன், பொருளாளர் எஸ்.சுப்பிரமணியன் ஆகி யோர் முன்வைத்தனர். இம்மாநாட்டில், அகில இந்திய பொதுச்செயலாளர் கே. ராகவேந்திரன், மாநில பொதுச்செய லாளர் பி.மோகன் ஆகியோர்  சிறப்பு ரையாற்றினர்.

சேலம் மாவட்ட செயலா ளர் என்.சண்முகம், மாநில உதவி பொதுச் செயலாளர் டி.நேதாஜி சுபாஷ் ஆகி யோர் வாழ்த்துரையாற்றினர். இதில், ஓய்வூதியர்களுக்கு மருத்து வப்படி ரூ.3 ஆயிரமாக ஒன்றிய அரசு உயர்த்தி வழங்க வேண்டும். நாடாளு மன்ற நிலைக்குழு சிபாரிசின் அடிப்ப டையில் 65 வயதை கடந்த ஓய்வூதியர் களுக்கு 5 சதமும், 70 வயதை கடந்தவர்க ளுக்கு 10 சதமும் 75 வயதை கடந்த வர்களுக்கு 15 சதமும் என்ற அடிப்படை யில் பென்சன் உயர்த்தி வழங்க வேண் டும். கமிட்டேசன் பிடித்தம் 15 ஆண்டு  என்பதை மாற்றி, 10 ஆண்டாக குறைக்க வேண்டும். மாநில அரசு வழங்குவது போல், ஓய்வுபெற்ற  மத்திய அரசு ஊழி யர்களுக்கும் ஒன்றிய அரசு காப்பீடு  வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் தரும புரி மாவட்ட தலைவராக வி.முருகே சன், மாவட்ட செயலாளராக பி.சுப்பிரம ணியன், பொருளாளராக ஜி.முருகேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக, எஸ்.நாகராஜ் நன்றி கூறி னார்.

;