ஈரோடு, ஆக. 6- அதிகாரத்தை மூன்றாவது முறையாக தக்கவைத்துக்கொள்ள, கலவரங்களை உருவாக்க சங் பரிவாரங்கள் முயற்சிப்ப தாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றஞ்சாட்டி யுள்ளார். ஈரோட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தி யாளர்களிம் பேசுகையில், அண்ணாமலை நல்ல விளம்பர பிரியர். அவர் பாதை யாத் திரை மணிப்பூரில் நடத்த வேண்டும். ஆனால் இங்கே வாகன பயணம் நடத்தி வருகிறார். அப்பட்டமான நாடகம் இது. நாடாளுமன்ற படிக்கட்டுகளைத் தொட்டு வணங்கி உள்ளே சென்ற பிரதமர் மோடி, இன்றைக்கு ஓடி ஒளிகிறார். மாநிலங்களில் கலவரங்களை உருவாக்கிறார்கள். மணிப்பூரில் கலவரங்கள் ஓயவில்லை. அரியானாவில் அடுத்த கலவரம் தொடங்கி விட்டது. இவர்கள் ஊர்வலம் நடத்தினாலே கலவரங்களை நடத்துவதற்குத்தான் என்பது பல்வேறு சம்பவங்களின் மூலம் நம்மால் உணர முடியும். குஜராத்தில் கற்ற பாடத்தை நாடு முழுவதும் விதைப்பதற்கு முயற்சிக் கிறார்கள். அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும், மூன்றாம் முறையாக வெற்றி பெறவும் கலவரங்கள், மத மோதல், மொழி மோதல் என உருவாக்கி ஜனநாயகத்தை சீரழித்து பாசிச பாதையில் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறது என குற்றம்சாட்டினார்.