செங்கல்பட்டு, ஜூலை 5- தேர்தல் கால வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியு றுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க் கும் வகையில் மாவட்ட தலைநகரங் களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் சார்பில் பேரணி நடைபெற உள் ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் எழுச்சி நாள் கூட்டம் மற்றும் மாணிக்க ஆண்டு கொடியேற்று விழா மாநிலத் தலைவர் மு.அன்பரசு தலை மையில் செங்கல்பட்டில் நடைபெற் றது. சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தெ.வாசுகி வர வேற்றார். இக்கூட்டத்தில், “2003ல் அடக்குமுறைகளை எதிர்கொண்ட தும், எதிர்கால சவால்களும்” என்ற தலைப்பில் மாநில பொதுச்செயலா ளர் ஆ.செல்வம் பேசினார். கோரிக் கைகளை விளக்கி முன்னாள் மாநி லத் தலைவர் இல.சீதரன், முன்னாள் மாநில பொதுச்செயலாளர் அ.ராஜா பாதர், முன்னாள் மாநிலப் பொருளா ளர்கள் என்.இளங்கோ, வி.தேவன், வே.கணபதி, எம்.தங்கராசு, தலைமை செயலக சங்க தலைவர் கு.வெங்க டேசன் ஆகியோர் பேசினர். இதைய டுத்து தமிழ்நாடு அரசு தேர்தல் வாக் குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழக முதல்வ ரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜூலை 11 ஆம் தேதியன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, தொடர்ந்து 24 ஆம் தேதி யன்று மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார் பில் பெருந்திரள் பேரணி நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தை நிறைவு செய்தும், “ஒன் றிய மற்றும் மாநில அரசுகளின் கொள் கைகளும், உழைக்கும் வர்க்கம் சந் திக்கும் சவால்களும்” என்ற தலைப் பில் சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் சிறப்புரையாற்றினார். மாநிலப் பொருளாளர் மு.பாஸ்கரன் நன்றி கூறினார்.