districts

img

என்டிசி ஆலைகளை உடனடியாக திறக்க வேண்டும் சிஐடியு கோவை மாவட்ட மாநாட்டில் தீர்மானம்

கோவை, செப்.18- பொதுத்துறை நிறுவனமான என்டிசி பஞ்சாலைகளை உடனடி யாக திறந்து, தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என சிஐடியு கோவை மாவட்ட மாநாட் டில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. இந்திய தொழிற்சங்க மையத் தின் (சிஐடியு) கோவை மாவட்ட மாநாடு (ஹர்ஷா மகால்) தோழர் பி.ரவிச்சந்திரன் நுழைவாயில், தோழர்கள் பி.கே.சுகுமாறன், ஆர். பழனிசாமி நினைவரங்கில் சனி யன்று எழுச்சியுடன் துவங்கியது. மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக தியாகி முத்துமேடையில் இருந் தும், சின்னியம்பாளையம் தியாகி கள் மேடையில் இருந்தும் தியாகி கள் நினைவு ஜோதியும், துடிய லூரில் இருந்து மாவட்ட மாநாட்டில் ஏற்றப்படும் செங்கொடியும் கொண்டு வரப்பட்டது. தியாகிகள் நினைவு ஜோதியை சிஐடியு மூத்த தலை வர் யு.கே.வெள்ளியங்கிரி உள் ளிட்ட தலைவர்கள் பெற்றுக் கொண்டனர். இம்மாநாட்டிற்கு சிஐ டியு மாவட்ட தலைவர் சி.பத்ம நாபன் தலைமை வகித்தார். கே. ரத்தினகுமார் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். கே.மனோகரன் வர வேற்புரையாற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன் உரையாற்றினார். அறிக் கைகளை மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி ஆகியோர் முன் வைத்தார். மாநாட்டை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், சிஐடியு மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன் ஆகியோர் உரையாற்றினர்

இம்மாநாட்டில், போராடி பெற்ற தொழிலாளர் நல சட்டங்களை முத லாளிகளுக்கு ஆதரவாக மாற்றி யதை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும். பொதுத்துறை நிறுவன மான என்டிசி ஆலைகளை திறந்து  தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். ரேசன் கடை களை கூட்டுறவு துறைகளிடம் ஒப்ப டைக்கக்கூடாது. நேரடி கொள் முதல் நிலையத்தில் அரிசி ஆலை முகவர்களை அனுமதிக்கும் திட் டத்தை கைவிட வேண்டும். உள் ளாட்சி துறையில் ஒப்பந்த பணி யார்களை பணி நிரந்தரம் செய்து,  காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும். மின் துறையை பொதுத்துறையாக நீட் டித்திட நடவடிக்கை எடுக்க வேண் டும். 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு பணி யிலில் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய பென் சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வுபெறும் போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு டிஏ உள்ளிட்ட பணப்பலன்களை உடன டியாக வழங்க வேண்டும். டாஸ் மாக் ஊழியர்களுக்கு பணி நிரந்த ரம், காலமுறை ஊதியம், இஎஸ்ஐ மருத்துவ திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த பணியாளர்களுக்கு வாரிய விலைப்பட்டியல் படியான ஊதி யம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.

இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்ட தலைவராக கே.மனோ கரன், செயலாளராக எஸ்.கிருஷ் ணமூர்த்தி, பொருளாளராக ஆர். வேலுசாமி, 9 துணைத்தலைவர் கள், 8 துணைச்செயலாளர்கள் உட் பட 40 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் உரையாற்றினார். இதைத்தொ டர்ந்து ஞாயிறன்று ஹோப்ஸ் சிக் னல் பகுதியிலிருந்து தொழிலாளர் கள் பேரணி துவங்கி, மசக்காளிபா ளைம் மைதானத்தில் நிறைவுற்றது. இதையடுத்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சிஐடியு அகில இந்திய  துணைத்தலைவர் ஏ.கே.பத்ம நாபன், மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் உள்ளிட்ட தலைவர் கள் உரையாற்றினர். இதில் திரளா னோர் கலந்து கொண்டனர்.

;