சேலம், ஜூலை 7- மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்புகள் கட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சேலம் மாநக ராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப் பட்டது. சேலம் மாநகர், 16 ஆவது வார்டுக் குட்பட்ட பெரம்பலூர், பெருமாள் கோவில் தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் அடிக்கடி சாக்கடை அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் சரியாக வெளியேற முடி யாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வரு கிறது. கழிவுநீர் தேங்குவதால் கொசுக் கள் உற்பத்தி, பொதுமக்களுக்கு நோய் தொற்றும் ஏற்படும் அபாயம் அதிகரிள் துள்ளது. இப்பகுதியில் குடியிருக்கும் சிலர் மாநகராட்சி இடத்தை ஆக்கிர மித்து வீடுகள் கட்டியுள்ளனர். இத னால், சாலை குறுகலாக்கப்பட்டு கழிவு நீர் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவ டிக்கை எடுத்து முறையாக கழிவுநீர் செல்ல உரிய தலையீடு செய்ய வேண் டும் என மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் வடக்கு மாந கர தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர்.