districts

img

பண்டைய மக்களின் வாழ்வியல் முறையை சொல்லும் பாறை ஓவியங்களை பாதுகாக்க கோரிக்கை

உடுமலை, டிச.2- ஜம்புக்கல் மலையிலுள்ள பாறை ஓவியங்களை பாதுகாக்க சமுக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடு மலை தாலுகா கல்லாபுரம் அருகே  மதகடிப்புதூர் மலையில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வசித்து வந்ததற்கான ஆதாரமாக, மலை பகுதியில் மக் கள் வாழ்வியிலை விளக்கும் வகையில் வெள்ளை நிற பாறை ஓவியங்கள் உள்ளன. இங்கு உள்ள ஓவியங்களில், பண்டைய கால மனிதர்கள் மலைக் குகைக ளில் இனக்குழுவாக வசித்து வந் தற்கான சான்றுகளும்,  சைகை குறியீடுகள் மூலம் தங்களின் மகிழ்ச்சி, சோகம் மற்றும் வீரத்தை  உணர்த்தும் வகையில் ஏராளமான  ஓவியங்கள் உள்ளது.  குறிப்பாக, ஆண்கள், பெண் கள் மற்றும் குழந்தைகள் ஒற்றுமை யாக மகிழ்ச்சியை வெளிப்படுத் தும் நடனம், வேட்டை முறை, சிங் கம், புலி உள்ளிட்ட வன விலங்குக ளால் ஏற்பட்ட ஆபத்துக்களை குறியீட்டுகள் மூலம் எச்சரிக்கும் ஓவியங்கள்  உள்ளது.  கற்கால  இறுதியில் மக்கள் ஒரே இடத்தில் வசிக்க துவங்கிய குழி வீடுகளும், பெரிய அளவிலான கை அச்சு ஒன்றும் காணப்படுகிறது. இந்த ஓவியங்கள் சுமார் 3 ஆயிரம் ஆண் டுகள் பழமையானதாக இருக்கும்  என கூறப்படுகிறது. ஆகவே, இவ்வகை ஓவியங் கள் உள்ள பகுதியை  தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண் டும் என கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இந் நிலையில் ஒவியங்கள் இருக்கும்  மலை அருகே உள்ள ஜம்புக்கல்  மலை பகுதியில் இயற்கையை அழிக்கும் நடவடிக்கைகள் அதிக ரித்து உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஆகவே, மாவட்ட நிர்வாகம் மதகடிப்புதூர் பாறை ஓவியங்களை பாதுகாக்க உடனடி யாக உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று சமுக ஆர்வலர் கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

;