districts

img

ஆவாரம்பாளையம் பாலத்தை திறந்திட கோரிக்கை

கோவை, டிச.12– கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களா கியும் காட்சிப் பொருளாக கிடப்பில் போடப்பட்டுள்ள கோவை ஆவாரம் பாளையம் பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்திட கோரிக்கை எழுந்துள்ளது. கோவை மாநகரில் அமைந்துள்ள கணபதி பகுதிக்கு அவிநாசி சாலை யிலிருந்து சென்றடைய வேண்டு மானால் காந்திபுரத்தைச் சுற்றித்தான் செல்ல வேண்டும் என்கிற நிலை இருந்து வந்தது. இதையடுத்து, காந்திபுரம் செல் லாமல் கணபதியை பகுதியை விரைந்து எட்டும் வகையில் ஆவாரம்பாளையம் முதல் கணபதியை இணைக்கும் வகை யில் கடந்த 2018 ஆம் ஆண்டு புதிய பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது. சுமார் 1 கி.மீ நீளமுள்ள இப்பாலப்பணி பல மாதங்களுக்கு முன்பே முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில், பாலத்தில் மின்விளக்கு அமைப்பது உள்ளிட்ட சிறு சிறு பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளது.  

முன்னதாக, இப்பாலம் 2020 ஆம் ஆண்டு மே மாதம் திறப்பதாக அறி விக்கப்பட்டிருந்த நிலையில் குறிப்பிட்ட நாட்கள் கடந்து பல மாதங்களாகியும் பாலம் இன்னும் பயன்பாட்டிற்கு திறக் கப்படவில்லை. அதேநேரம், இப் பாலத்தினையொட்டிய சாலைகள் மிக வும் குறுகியதாக உள்ளதால் அப்பகுதி யின் வழியே செல்லும் வாகன ஓட்டி களும், பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இப் பாலப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடன டியாக திறந்திட வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

;