districts

img

ஆட்டுமலை பழங்குடியினர் குடியிருப்புக்கு தார்ச்சாலை அமைத்து தர கோரிக்கை

திருப்பூர், செப். 11 - உடுமலைப்பேட்டை வட்டம் ஆட்டுமலை பழங் குடியினர் குடியிருப்புக்கு தார்ச்சாலை அமைத்துத் தர  மாவட்ட ஆட்சியரிடம் தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது. சனிக்கிழமை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் கோடந்தூர், ஆட்டு மலை செட்டில்மெண்ட் பகுதிக்கு நேரில்  சென்று ஆய்வு மேற்கொண்டார். அப் போது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க  திருப்பூர் மாவட்டத் தலைவர் க.குப்புசாமி, மாவட்டச் செயலாளர் கோ.செல்வன் ஆகி யோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: உடுமலைப்பேட்டை மலைப் பகுதியில் ஆட்டுமலை வனக்குடியிருப்பில் 30க்கும் மேற்பட்ட முதுவார் இன பழங்குடி இன  மக்கள் வசித்து வருகின்றனர். 2006ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி ஆட்டுமலை  வன குடியிருப்பு மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. விவசாய நிலப் பட்டா வழங்குவதற்கான வேலைகளும் நடை பெற்று வருகிறது.

 சின்னார் வன சோதனை சாவடியில் இருந்து ஆட்டுமலை வன குடியிருப்புக்கு 7  கிலோமீட்டர் தொலைவு மண் சாலை உள்ளது. இந்த மண் சாலையில் மழை  காலங்களில் எங்களுடைய விவசாயப் பொருட்களையும், சந்தை பகுதிக்கு கொண்டு செல்வதில் பெரும் சிக்கல் ஏற் படுகிறது. அத்தியாவசியப் பொருட்களை பெற்றுச் செல்வதிலும் ரேசன் அரிசியை வாங்கிச் செல்வதிலும் பெரும் சிரமம் உள்ளது. எங்கள் குழந்தைகள் பள்ளிக்குச்  சென்று வருவதிலும், உடல்நிலை சரி யில்லாத நேரங்களில் மருத்துவமனைக்கு சென்று வருவதிலும் பெரும் சிரமம் உள்ளது. எனவே கோடந்தூர் மலைவாழ் மக்க ளுக்கும், ஆட்டுமலை மலைவாழ் மக்களின்  பயன்பாட்டிற்காகவும் சின்னார் வன சோதனை சாவடியில் இருந்து ஆட்டுமலை வனக் குடியிருப்பு வரை தார்ச்சாலை அமைத்துத் தர ஆவன செய்யும்படி மலை வாழ் மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.