திருப்பூர், நவ.30- திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் இடுவாய் ஊராட்சியில் உள்ள இரண்டு பள்ளிக் கூடங்களில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர மாவட்ட ஆட்சியர் சிறப்பு நிதி ஒதுக்கி தரு மாறு ஊராட்சி மன்ற தலைவர் கே.கணே சன் கோரியுள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினித் திடம் செவ்வாயன்று இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித் தார். இடுவாயில் உள்ள ஆரம்பப் பள்ளி யின் கட்டிடங்கள் பழுதடைந்து இடிக்கப் ்பட்டதாலும், மீதியுள்ள பள்ளி வகுப்ப றைகள் மிகவும் பழுதடைந்து உள்ள கார ணத்தினால், தற்போது 2 அறைகளில் 200க் கும் அதிகமான மாணவர்கள் நெருக்கமாக அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் வகுப்புகள் நடைபெறுவதாலும், பள்ளி மாணவர்கள் சமூக இடைவெளியுடன் படிப் பதற்காகவும் சிறப்பு நிதி ஒதுக்கி கூடுதல் பள்ளி அறைகள் கட்டித் தர வேண்டும்,
பாரதிபுரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் 400-க்கும் அதிக மான மாணவர்கள் ஏழு அறைகளில் நெருக் கமாக அமர்ந்து படித்து வருகிறார்கள். மாணவ, மாணவியர்கள் படிப்பதற்கு வசதியாக பாரதிபுரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளி வளாகத்தில் கூடுதல் பள்ளி அறைகள் சிறப்பு நிதி ஒதுக்கி கட்டித் தர வேண்டும். இடுவாயில் உள்ள நியாய விலை கடை யில் 1450க்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகள் உடன் இயங்குவதால், அந்த கடையை இரண்டாக பிரித்து புதிய கடை அமைக்க கோரி ஆண்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார் பில், மனு கொடுத்து ஒரு வருடத்திற்கு மேலா கியும், ஏற்கனவே மாவட்ட ஆட்சித் தலைவரி டம் இருமுறை இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், இன்னும் கடை பிரிக்கப் படாமல் உள்ளது. எனவே கடையை பிரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு தரப் பட்டது. இந்நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் இடுவாய் வடக்கு கிளைச் செயலாளர் க.கருப்புசாமி, சீரணம் பாளையம் கிளை செயலாளர் பிரகாஷ், இடு வாய் தெற்கு கிளை செயலாளர் சுந்தரம் ஆகி யோர் கலந்து கொண்டனர்.