districts

img

சுமைகளுடன் நடைபயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் பேருந்து நிறுத்தம் ஏற்படுத்தக் கோரிக்கை

திருப்பூர், டிச.22- பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப் பள் ளிக்கு வரும் மாணவ, மாணவிகளின் வசதிக் காக அப்பகுதியில் பேருந்து நிறுத்தம்  அமைக்க வேண்டும் என்று பெற்றோர், ஆசி ரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் -  கணக்கம்பாளையம் சாலையில் பாலசமுத் திரம் முன்பாக பெருமாநல்லூர் அரசு மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப் பள்ளியில் 826 மாணவர்கள் படித்து வரு கின்றனர். அத்துடன் பெருமாநல்லூர் பெண் கள் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் அங்கு அதற்குரிய வசதி இல்லாத நிலையில், 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளும் தற்காலிகமாக பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப் பள் ளிக்கு வந்தே படித்து வருகின்றனர். இந்த மாணவிகள் சுமார் 500 பேரையும் சேர்த்து மொத்தம் சுமார் 1300 பேர் இப்பள்ளியில் தற்போது படித்து வருகின்றனர்.  ஆனால் பள்ளிக்கூடம் அமைந்திருக் கும் அப்பகுதிக்கு போதிய பேருந்து போக்கு வரத்து இல்லை. திருப்பூர் பழைய பேருந்து  நிலையத்தில் இருந்து பெருமாநல்லூர் வழி யாக கணக்கம்பாளையம் செல்லக்கூடிய 43ஆம் எண் பேருந்து ஒன்று மட்டுமே அவ் வழியாக இயக்கப்பட்டு வருகிறது.

இந்த  பேருந்தும் சரியான நேரத்திற்கு வருவ தில்லை. பெருமாநல்லூர் பேருந்து நிறுத்தத் தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் இப்பள்ளிக்கூடம் அமைந்துள் ளது. சுற்று வட்டார கிராமப்புறங்களுக்கு மையமான பகுதியாக பெருமாநல்லூர் இருப்பதால் நாலா திசைகளில் இருந்தும் பேருந்துகளில் வரக்கூடிய மாணவர்கள் அங்கிருந்து 43 ஆம் எண் பேருந்தை எதிர் பார்க்கும் நிலை உள்ளது. அத்துடன் அந்த  வழித்தடத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே பேருந்து நிறுத்தமும் இல்லை. எனவே பள்ளியைத் தாண்டி அரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பாலசமுத்தி ரம் பேருந்து நிறுத்தத்தில் மாணவர்களை இறக்கி விடுகின்றனர். மறுபடியும் அங்கி ருந்து பள்ளிக்கு மாணவர்கள் நடந்து வர வேண்டியுள்ளது. இவ்வாறு பேருந்தும் போதிய அளவு  இயக்கப்படாமல், பேருந்து நிறுத்தமும் இல் லாமல் பல நூறு மாணவ, மாணவியர் காலை, மாலை புத்தக பைகளுடன் நடந்தே பள்ளிக்கு வந்து செல்லும் நிலை தொடர் கிறது. அரசுப் பள்ளிக்கு முன்பாகவே இட  வசதியும் இருக்கும் நிலையில் அங்கு ஒரு  பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும். 43ஆம் எண் திருப்பூர் - கணக்கம்பாளையம் பேருந்து சரியான நேரத்தில் இயக்கப்பட்டு  மாணவ, மாணவிகளை அரசுப் பள்ளி அருகி லேயே இறக்கி விட ஏற்பாடு செய்ய வேண் டும். அத்துடன் திருப்பூர் - பெருமாநல்லூர் -  குன்னத்தூர் வரை 10ஆம் நம்பர் உள்ளிட்ட  வழித்தடப் பேருந்துகள் ஏராளமாக இயக் கப்படுகின்றன. ஆனால் அவை அனைத்தும் திருப்பூர் பெருமாநல்லூர் பிரதான சாலை யில் தான் சென்று வருகின்றன.

அதில் குறிப் பிட்ட எண்ணிக்கையிலான பேருந்துகளை காலை, மாலை பள்ளி நேரங்களில் அரசு  மேல்நிலைப் பள்ளி வழியாக வந்து செல்லும் படி ஏற்பாடு செய்தால் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் சுமைகளுடன் கிலோ  மீட்டர் கணக்கில் நடந்து செல்லும் சிரமத் தைக் குறைக்க முடியும் என்று இப்பள்ளி ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும் கூறுகின்றனர். முன்னதாக,இங்கு பேருந்து வசதி செய்து தரக்கோரி கடந்த காலங்களில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழா நிகழ்ச் சிக்கு வந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டவர்களிடம் கோரிக்கை மனு  கொடுத்துள்ளனர். அவர்களும் நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்துச் சென்ற னர். அத்துடன் திருப்பூர் அரசுப் போக்குவரத் துக் கழக நிர்வாகத்திற்கும் பள்ளி பெற்றோர்  ஆசிரியர்கள் சார்பில் பேருந்து நிறுத்தம், கூடுதல் பேருந்து வசதி கோரி மனுக் கொடுத் துள்ளனர். அதனை ஏற்று அதிகாரிகளும் ஒரு நாள் பள்ளிக்கு வந்து இங்குள்ள நிலையை ஆய்வு செய்து சென்றுள்ளனர்.  ஆனால் ஏனோ பேருந்து நிறுத்தமும் அமைக்கப்படவில்லை, கூடுதல் பேருந்து களும் இயக்கப்படவில்லை. வந்து கொண் டிருக்கும் ஒரேயொரு பேருந்தும் குறித்த  நேரத்தில் வருவதில்லை என்று பெற்றோர் கள் வேதனையுடன் கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்துக் கழ கமும் பல நூறு மாணவ, மாணவிகளின் தேவையை கவனத்தில் கொண்டு, உடனடி யாக பேருந்து நிறுத்தம் ஏற்படுத்தி, பள்ளி  நேரங்களில் கூடுதல் பேருந்துகள் வந்து  செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற் றோர் ஒட்டுமொத்தமாக வலியுறுத்துகின் றனர்.

;