districts

img

குடியரசு தின விளையாட்டு போட்டிகள்

ஈரோடு, ஜன. 25- குடியரசு தினத்தையொட்டி ஈரோடு மாநகராட்சி நடுநி லைப்பள்ளியில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சியில் எஸ்கேசி ரோட்டில் அரசு நடுநி லைப்பள்ளியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், உள்ளிட்ட போட்டிகள் நடை பெற்றது. இதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் தி ஈரோடு  டென்னிஸ் கிளப் தலைவர் சி.முத்துசாமி. செயலாளர் ஆர். வேலுச்சாமி. மாமன்ற உறுப்பினர் ரேவதி திருநாவுக்கரசு, வட்டாரக் கல்வி அலுவலர் மணிவண்ணன், பள்ளி மேலாண் மைக்குழு தலைவர் ஹேமலதா, துணைத்தலைவர் சித்திரை குமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முடிவில், தலைமை ஆசிரியர் கே.சுமதி நன்றி கூறினார்.