திருப்பூர், ஜூன் 12- பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பு சேர்க்கை மறுக்கப்பட்டதால், ஆசிரியர்களுடன் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், பல்ல டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பு சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதேபள்ளியில் படித்து 10 ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைவாக எடுத்துள்ள மாணவர்களுக்கும், வேறு அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கும் அட்மிசன் போட முடியாது என ஆசிரியர்கள் தெரிவித்ததால், பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தாராபுரத்தில் உள்ள ஐடிஐ கல்லூரியில் சேருமாறு தலைமை ஆசிரியரே விளம்பர நோட்டீசை கொடுத்து மாணவர் களை அலைக்கழிப்பதாகவும் பெற்றோர்களும், மாணவர்களும் புகார் தெரிவித்துள்ளனர். இதேபள்ளியில் படித்த மாண வர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்தாலும், அதேபள்ளியில் படித்து குறைவான மதிப்பெண் எடுத்ததாகக்கூறி சேர்க்கை மறுக்கப்படுவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பல்லடத்தில் உள்ள மாணவர்கள் கரடிவாவில் உள்ள அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்துவிட்டு,
இங்கு அட்மிசன் கேட்டாலும் மறுக்கப்படுவதாகவும். குறைவான மதிப்பெண் எடுத்தவர்களுக்கு இங்கு அட்மிஷன் போட முடியாது என ஆசிரியர்கள் மறுக்கின்றனர். 100 மாணவர்களுக்கு மட்டுமே 11 ஆம் வகுப்பு சீட் வழங்கப்படும் எனவும், குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அவர் கள் விரும்பும் பாடப்பிரிவில் அட்மி ஷன் போட முடியாது எனவும், அதிக மதிப்பெண் எடுத்த மாண வர்களுக்கு அட்மிஷன் போடப்பட்ட பின்பே உங்களுக்கு மீதமுள்ள பாடப்பிரிவுகளில் அட்மிஷன் கொடுக்கப்படும் எனவும் ஆசிரி யர்கள் தெரிவித்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கடந்த ஒரு வார காலமாக அட்மிசன் தராமல் இழுத்தடிப்பதாகவும், இதனால் தங்களது பிள்ளைகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் பெற்றோர் கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பல்லடத்தில் இருந்து கரடிவாவிக்கு பேருந்து வசதி சரிவர இல்லாத தால், பல்லடத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிள்ளையை சேர்க்கலாம் என வந் தால் ஆசிரியர்கள் அட்மிசன் தர முடியாது என மறுப்பதாகவும் பெற்றோர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் பல்லடத்தில் மட் டும் நிகழவில்லை. தமிழ்நாடு முழு வதும் இதேநிலை உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுத்து, மாணவர் களின் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என மாணவர் நல பெற் றோர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.