districts

img

மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்ட எதிரொலி: புதிய கட்டிடமாக மாறிய ரேசன் கடை

உடுமலை, டிச.2-   பழுதடைந்த நிலையில் இருந்த ரேசன்  கடையை புதுப்பிக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரேசன் கடை புதுப்பிக்கப்பட்டு பொதுமக் கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட் டது.   திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா நரசிங்கபுரம் பகுதியில் ஐ.பி 109  என்ற எண் கொண்ட ரேசன் கடை கடந்த  2002 ஆம் ஆண்டு பொது மக்கள் பயன்பாட் டிற்காக திறக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கட்டிடம் தற்போது மிகவும் சிதலமை டைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள தால், கட்டிடத்தை புதுப்பிக்கக்கோரி பல முறை துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் பயன் இல்லை. இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நரசிங்காபுரம் கிளையின் சார்பில் போராட்ட அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது. இந்த போராட்ட அறிவிப்பால், தற்பொழுது ரேசன் கடை  புதுப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட் பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

;