districts

img

குடியிருப்பு பகுதியில் புகுந்த மழைநீர் சேலம் மேயர், ஆணையாளர் ஆய்வு

சேலம், செப்.9- சேலம் மாநகராட்சி குடியிருப்பு  பகுதிக்குள் புகுந்த மழைநீரால் ஏற் பட்ட சேதங்கள் குறித்து மாநகராட்சி  மேயர் ஆர்.ராமச்சந்திரன், ஆணை யாளர் தா.கிறிஸ்துராஜ் ஆகியோர்  ஆய்வு மேற்கொண்டனர். சேலம் மாவட்டத்தில் பெய்து வரும்  தொடர் மழையின் காரணமாக மழைநீர்  குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந் துள்ளது. இந்நிலையில், அஸ்தம்பட்டி மண்டலம், கோட்டம் எண்.17 தோப்புக் காடு, சின்னபுதூர் ஆகிய பகுதிகளில்  மழைநீர் சூழ்ந்துள்ளதை மாநக ராட்சி மேயர் ஆர்.ராமச்சந்திரன், சட்ட மன்ற உறுப்பினர் ரா.ராஜேந்திரன், ஆணையாளர் தா.கிறிஸ்துராஜ் ஆகி யோர் நேரில் பார்வையிட்டனர்.  மேலும், அப்பகுதி பொது மக்க ளிடம் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும், மழைக்காலங்களில் தோப்புக்காடு ஓடையில் செல்லும் மழைநீர் குடியி ருப்பு பகுதிக்குள் புகுவதை நிரந்தர மாக தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்  ஆய்வு செய்தனர். அதேபோன்று பிற பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதை ஆய்வுசெய்து உடனடியாக மழை நீரை அப்புறப்படுத்திட தேவையான  நடவடிக்கை மேற்கொண்டு மழை நீரால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க உரிய முன்னெச்செரிக்கையுடன் பணி களை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

;