திருப்பூர், டிச.14- பயனாளிகளுக்கு முறையாக நிலத்தை அளந்து கொடுக்காத தனி வட்டாட்சியரை கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவை யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், முதலிபாளை யம் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக 2021 ஆம் ஆண்டு 35 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்த நிலத்தில் 15 பயனாளிகளுக்கு முறையாக நிலத்தை அளந்து கொடுக்காத தனி வட்டாட்சியர், நிலத்தை அளந்து தருவதாக பயனாளிகளை தொடர்ந்து அலைக்க ழித்து காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் ஆதித்தமிழர் தொழிலா ளர் பேரவையின் மாநில துணைச் செயலாளர் சோழன், திருப்பூர் வரு வாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்து அதனடிப்படையில் செவ்வா யன்று தனி வட்டாட்சியர் நிலத்தை அளந்து தருவதாக வாக்குறுதி கொடுத் தார். எனினும் உறுதியளித்தபடி செவ்வா யன்று தனி வட்டாட்சியர் நிலத்தை அளந்து கொடுக்காததால் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவையை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நிர்வாகிகள் சோழன், கவிதா மற்றும் பட்டா பெற்ற பயனாளிகள் கலந்து கொண்டனர்.