districts

img

நெடுஞ்சாலை பகுதியில் கேட் அமைக்க முயற்சி பெருமாநல்லூரில் பொது மக்கள் எதிர்ப்பு

அவிநாசி, ஜூன் 1- பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார  நிலையத்திற்கு செல்லும் நெடுஞ்சா லைத் துறை சாலையில் கொண்டத்து காளியம்மன் கோவில் நிர்வாகத்தினர் கேட் அமைக்க முயற்சி செய்து வருகின் றனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பெருமாநல் லூரில் கொண்டத்துக் காளியம்மன் கோவில்  அமைந்துள்ளது. இந்தக் கோயில் வளாகத்தின் இடையே நெடுஞ் சாலைத் துறைக்கு சொந்தமான சாலை  உள்ளது. இச்சாலை வழியாக நகரப் பேருந்துகளும் நம்பியூர் வரை செல் கின்றது. மேலும், கோவிலின் மதில் சுவர்  அருகிலேயே ஆரம்ப சுகாதார நிலை யம் செயல்பட்டு வருகிறது. இங்கு தாய்  சேய் நல விடுதி அமைந்துள்ளது. இத னால் பொதுமக்கள் மருத்துவம னைக்கு செல்ல இந்த பாதையைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும்,  அவசர ஊர்திகளும் மருத்துவம னைக்கு சென்று வருகிறது.  இந்நிலையில் மதில்சுவர் எழுப்பி பாதையை மறைத்து கேட் அமைக்க கோயில் நிர்வாகத்தினர் வெள்ளியன்று அளவீடு செய்துள்ளனர். இதற்கு பெருமாநல்லூர் ஊர் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஐந்து  ஆண்டுகளுக்கு மேலாக கேட் அமைக்க  கோயில் நிர்வாகத்தினர் முயற்சி செய்வ தும், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்ப தும், இப்பணி தள்ளிப் போவதும் வாடிக் கையாக இருந்து வந்தது. இப்பிரச்சனை தொடர்பாக இந்து  சமய அறநிலையத் துறை, நெடுஞ்சா லைத்துறை, மாவட்ட ஆட்சியர் உள் ளிட்ட அனைவருக்கும் மனு அளிக்கப்  போவதாக பொதுமக்கள் தெரிவித்துள் ளனர். மேலும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கடையடைப்பு மற்றும் பொது மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

;