அவிநாசி, மார்ச் 7- திருமுருகன்பூண்டி அருகே அம் மாபாளையத்தில் தனியார் பேருந் தின் அலட்சியத்தால் பெண் உயி ரிழந்த சம்பவத்தில் நீதி கேட்டு பொது மக்கள் சார்பில் அவிநாசியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தனியார் பேருந்து அலட்சி யத்தால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு நீதி கேட்டும், தவறி ழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவிநாசியில் சமூக ஆர்வலர் அமைப்பினர் செவ் வாயன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், பலியான செல்வியின் இரு மகள்களின் படிப்புச் செலவை அரசு ஏற்க வேண்டும், குடும்பத்தில் ஒருவ ருக்கு அரசு வேலை வழங்க வேண் டும், அனைத்து பேருந்துகளும் அவி நாசி, தெக்கலூர் வழியாக வந்து செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். அத்துடன், தெக்கலூர் பகுதியில் கடை அடைப்பு போராட்டம் நடை பெற்றது. இப்பகுதி முழுவதும் நூற் றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக் கப்பட்டிருந்தன. இன்று மார்க்சிஸ்ட் கட்சி மறியல் திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றி யக்குழு சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் இப்பிரச்சனை குறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் தனியார் பேருந்து முதலா ளிகளின் லாப வேட்கைக்காக அப்பா விப் பொதுமக்கள் பலர் தொடர் பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். திருப்பூர் – கோவை, கோவை - திருப் பூர் செல்லும் அனைத்துப் பேருந்துக ளும், அனுமதிக்கப்பட்ட வழித்த டங்களான அவினாசி, தெக்கலூர் நிறுத்தங்களுக்கும், கால அட்டவ ணைப்படி முழுமையாக சென்று வரு வதை உறுதிப்படுத்த வேண்டும். பயணிகளைத் தரக்குறைவாக, தகாத வார்த்தைகள் பேசி இழிவுப டுத்தக் கூடாது. சீருடை அணிந்த நடத் துநர், ஓட்டுநர் தவிர்த்து, வேறு நபர் கள் வருவதைத் தடுக்க வேண்டும். பயணிகள் பேருந்தில் ஏறி, இறங்கு வதை உறுதிப்படுத்திய பிறகே பேருந்தை இயக்க வேண்டும்.
அசுர வேகத்தில் பேருந்துகளை இயக்குவ தைத் தடுத்திட கண்காணிப்பைத் தீவி ரப்படுத்த வேண்டும். இந்த குற்றங் களில் ஈடுபடும் பேருந்துகளின் வழித் தட உரிமம், ஓட்டுநர், நடத்துநர் உரி மங்களை முடக்குதல், சட்டப்படி வழக்குப் பதிவு செய்தல் உள் ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இச் சம்பவத்தில் நீதி கேட்டு புதன்கிழமை (இன்று) மார்க்சிஸ்ட் கட்சி அவி நாசி ஒன்றியக்குழு சார்பில் ஆட்டை யம்பாளையத்தில் மறியல் போராட் டம் நடைபெற உள்ளது. உரிமம் ரத்து உத்தரவு இதனிடையே தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் உயிரி ழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பேருந்தின் வழித்தட அனுமதியை ஒரு வாரத்திற்கு ரத்து செய்தும், அந்த பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் உரி மத்தை ஆறு மாதத்திற்கு ரத்து செய் தும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் திங்களன்று உத்தரவு பிறப்பித் தார். முன்னதாக, இந்த விபத்து தொடர் பாக திருமுருகன்பூண்டி போலீ சார் வழக்குப்பதிவு செய்து ஓட்டுநர் சுரேந்திரன், நடத்துநர் தேவராஜ் ஆகி யோரை கைது செய்தனர்.