districts

img

தாராபுரத்தில் பேருந்துகளை உரிய இடத்தில் நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை

தாராபுரம், செப். 14 - தாராபுரம் பேருந்து நிலையத்தில் பேருந் துகளை உரிய இடத்தில் நிறுத்தாமல் பேருந்து  நிலையத்தின் மையப்பகுதிகளில் நிறுத்து வதால் பொதுமக்கள் அவதியடைந்து வரு கின்றனர். எனவே பேருந்துகளை உரிய இடத் தில் நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை, மதுரை, ஈரோடு, திருப்பூர், பல் லடம், ஒட்டன்சத்திரம், பழனி, திண்டுக்கல் மற்றும் தென்மாவட்டங்களுக்கு பொதுமக் கள் செல்ல மையப்பகுதியாக தாராபுரம் பேருந்துநிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி நூற் றுக்கணக்கான தனியார் மற்றும் அரசு பேருந் துகள்வந்து செல்கின்றன. இந்த பேருந்துக ளில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வேலை நிமிர்த்தமாகவும், திருமணம் மற்றும்  சுப காரியங்களுக்காக  வெளியூருக்கு சென்று வருகின்றனர்.  

இந்நிலையில் பேருந்து நிலையம் உள்ளே வரும்  பேருந்து கள் பெரும்பாலும் அதற்கென ஊர்வாரியாக ஒதுக்கப்பட்ட ரேக்குகளில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்குவதோ, ஏற்று வதோ இல்லை. பேருந்து ஓட்டுநர்கள் பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதும், ஏற்றி செல்வதும் வாடிக்கையாக கொண் டுள்ளனர். இதனால் பேருந்து நிலையத்தில் ஊர்வாரியாக பேருந்து நிற்குமிடத்தில் புதி தாக வருபவர்கள் காத்து நிற்கின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் பயணிகளை  இறக்கிவிடவோ அல்லது ஏற்றிசெல்லவோ வரும் உறவினர்கள் பேருந்துநிலையத்தின் இருபுறமும் இருசக்கர வாகனத்தை சைக் கில் ஸ்டாண்ட் போல நிறுத்திக் கொள்கின் றனர். இதனால் போக்குவரத்துக்கு இடை யூறு ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நிர் வாகமும், காவல்துறையும் பேருந்துகளை ஊர்வாரியாக அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தவும் இருசக்கர வாகன ஓட்டி கள் வாகனங்களை போக்குவரத்து இடை யூறு ஏற்படாதவாறு நிறுத்தவும் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;