districts

img

சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

வால்பாறை, ஏப்.18-

வால்பாறை நகர்புற பகுதிகளில் சிறுத்தைகள் நட மாட்டம் அதிகரித்துள்ளதால், வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வால்பாறை பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறை நகர்புற பகுதியான வாழைத்தோட்டம் கக்கன் காலனி, துளசி நகர் போன்ற இடங்களில் வனத்தை விட்டு வெளி யேறிய சிறுத்தைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியா கும். இந்நிலையில், வால்பாறை நகர்  பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வாழைத்தோட்டம் பகுதியில் தேயி லைத் தோட்டத்தில் இருந்து வெளியேறிய மூன்று வய துடைய சிறுத்தைக்குட்டி ஒன்று இரவு நேரத்தில் உலா வந்தது. இதனைக்கண்ட பொதுமக்கள் தங்களது செல் போனில் படம் பிடித்துள்ளனர்.

இது தற்போது சமூக வலை தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும், சிறுத்தை நடமாட்டம் குறித்து  வனத்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் வனத்துறையினர் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வரு கின்றனர். மேலும், கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.