districts

img

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கல்

தருமபுரி, டிச.14- தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிர் சுய உத விக் குழுக்களைச் சேர்ந்த  உறுப்பினர் களுக்கு கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட  உதவிகளை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர் சினி வழங்கினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாயன்று மாநிலம் முழுவதும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார். இதன்ஒரு பகுதியாக, தருமபுரி அரசு கலைக்கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தலைமை வகித்து, 645 மகளிர் சுய உதவிக்  குழுக்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 385 உறுப் பினர்களுக்கு ரூ.55.06 கோடி மதிப்பிலான கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவி களை வழங்கினார்.  முன்னதாக, இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ் வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கள் தடங்கம்.பி.சுப்பிரமணி, பி.என்.பி.இன் பசேகரன், மகளிர் திட்ட இயக்குனர் பாபு,  கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ராமதாஸ் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர் கள் பலர் கலந்து கொண்டனர்.