districts

img

நூறு நாள் திட்ட அட்டையுள்ள அனைவருக்கும் வேலை வழங்குக

சேலம், ஜூலை 13- சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சியில் வேலை அட்டை பெற் றுள்ள அனைவருக்கும் வேலை வழங்க  வலியுறுத்தி அகில இந்திய விவசாய  தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.  கிராமப்புற எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலை உறுதி திட்டம் கொண்டு வரப் பட்டது. இத்திட்டம் மூலம் நாடு முழு வதும் 5 கோடிக்கு மேற்பட்ட குடும் பங்கள் வேலை வாய்ப்பை பெற்று வரு கின்றனர்.  இந்நிலையில், இத்திட்டத்தை சீர் குலைக்கும் நோக்கத்தோடு, ஒன்றிய  மோடி அரசு, தொடர்ந்து நிதியை  குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. இதே போன்று, பல இடங்களில் ஊதியத்தை குறைத்து கொடுப்பது, வேலைக்கு வராதவர்களின் பெயரில், கணக்கு எழுதி பணத்தை முறைகேடாக அப கரிப்பது என பல முறைகேடுகள் நடை பெறுகிறது. இத்தகைய நடவடிக்கை களை கண்டித்து நாடு முழுவதும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் தொடர் போராட்டத்தை முன் னெடுத்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்  திட்டத்தில் வேலை அட்டை வைத்துள்ள  பேரூராட்சி பகுதியை சேர்ந்த அனைத்து மக்களுக்கும் வேலை வழங்க வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, காடை யாம்பட்டி தாலுகாச் செயலாளர் ஜெயக் கொடி தலைமை ஏற்றார். சங்கத்தின்  மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்த லிங்கம் சிறப்புரையாற்றினார். இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.கே. சேகர், மாவட்டத் தலைவர் ஜி.கணபதி,  நிர்வாகிகள் எம்.சின்ராஜ், ஓமலூர் விவ சாய தொழிலாளர் சங்க செயலாளர் ரவிக்குமார், தலைவர் ஈஸ்வரன் உள் ளிட்ட திரளான விவசாய தொழிலாளர் கள் கலந்து கொண்டனர்.