மதுரை, அக்.6- ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள உபா சட்டத்தையும், என்ஐஏ அமைப்பை பயன்படுத்தி நட வடிக்கை மேற்கொள்ளும் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்தும் தமி ழகத்தில் இணை ஆட்சி செய் திட நினைக்கும் தமிழக ஆளு நரை கண்டித்தும் வியாழ னன்று மதுரையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமுக்கம் மைதானம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவு ஸ்தூபி அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மனிதநேய மக்கள் கட்சி மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது தலைமை வகித்தார். காங்கி ரஸ் விருதுநகர் நாடாளு மன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர், சிபிஎம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சிபிஐ திருப் பூர் நாடாளுமன்ற உறுப்பி னர் க.சுப்பராயன், மதிமுக மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன், விசிக கனியமுதன், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திபேன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் இரா. விஜய ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் புறநகர் மாவட்டச் செய லாளர் காளிதாஸ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஆயி ரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அர சின் ஜனநாயக விரோதச் சட்டங்களை எதிர்த்து முழக் கங்கள் எழுப்பினர்.