districts

img

புதிய பஞ்சப்படி உயர்வை வழங்காததை கண்டித்து போராட்டம்

சேலம், நவ.7- புதிய பஞ்சப்படி உயர்வை வழங் காத தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிர்வாகத்தை கண்டித்து ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர் நல அமைப் பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2015 டிசம்பர் மாதம் முதல் வழங்க வேண்டிய பஞ்சப்படி உயர்வை இது வரை போக்குவரத்து துறை வழங்க வில்லை. குறிப்பாக, நவ.5 ஆம் தேதிக் குள் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழி லாளர்களுக்கு வழங்க வேண்டிய அக விலைப்படி உயர்வை வழங்க வேண் டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை அலட்சியப்போக்குடன் நடக்கும் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தமி ழக அரசை கண்டித்து தமிழகம் முழு வதும் ஏழு மண்டலங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் போக்குவரத்து தலைமை  அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட் டத்திற்கு ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர் அமைப்பின் மண்டல தலைவர் பி.என்.பழனிவேலு தலைமை  வகித்தார். இதில், அரசு விரைவு போக்கு வரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப் பின் சேலம் கிளை செயலாளர் மணி முடி, ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் தருமபுரி கோட்ட செயலாளர் குப்புசாமி, தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்றோர் சங்க  மாவட்ட செயலாளர் ராஜ்குமார், ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு ஊழியர் சங்க நிர்வாகி கே.ஆர்.கணேசன், நேதாஜி சுபாஷ், தமிழ்நாடு அரசு போக் குவரத்து கழக ஊழியர் சங்க சேலம் கோட்ட பொதுச்செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, தலைவர் செம்பான் உள்ளிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை

கோவை மேட்டுபாளையம் சாலை யில் உள்ள  அரசு போக்குவரத்துக்கழக தலைமையகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார்.. இதில் பொதுச்செயலாளர்  செல்வரா சன், துணை பொதுச்செயலாளர் சேது ராமன் நிர்வாகிகள் கிருஷ்ணராஜ், கருப்புசாமி, சுரேந்திரன், ஜோதி, உஷா, கிருஷ்ணவேணி உட்பட திரளானோர் பங்கேற்றனர். இதில், பல்வேறு சகோ தர சங்கங்களின் தலைவர்கள் பங் கேற்று உரையாற்றினர்.