சேலம், ஜூலை 13- வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கைது செய்ய வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தினர், சமூக விரோத செயல்களை களைய வலியுறுத்தி தொடர்ந்து பல் வேறு இயக்கங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற் பனையை தடுக்க வலியுறுத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சேலம் மாவட்ட செயலாளர் பெரியசாமி மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற் றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிக ளில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் வடக்கு மாநகர குழு சார் பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாநகர செயலாளர் குரு பிர சன்னா தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் பாரதி கண்டன உரையாற்றினார். இதில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வெற்றிவேல், சிபிஎம் வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன் குமார் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வாலிபர் சங்க சேலம் மேற்கு மாந கரக்குழு சார்பில் சூரமங்கலம் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மேற்கு மாநகர தலைவர் கோபி தலைமை வகித் தார். இதில் வாலிபர் சங்க மாவட்ட தலை வர் வி.ஜெகநாதன், சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ஐ.ஞானசௌந்தரி, மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ், மாவட் டக்குழு உறுப்பினர் பி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். மேச்சேரி பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் ஆர்.பழனி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் மணிமுத்து, வாலிபர் சங்க நிர்வாகி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர். ஜலகண்டாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சிபிஎம் ஒன்றிய செய லாளர் ராஜாத்தி தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில், மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.கவிதா, வாலிபர் சங்க நிர்வாகி சாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மாவட்டம், பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வி.ஏ. விஸ்வநாதன் தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் சங்க தாலுகா தலை வர் கே.குப்புசாமி, சிஜடியு செயலாளர் எஸ்.என்.மயில்சாமி, வாலிபர் சங்க மாவட்டகுழு உறுப்பினர் சதீஸ், கோபால் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.